சிங்கள இயக்குனர் பிரசன்ன விதனாகேவுடன் ஒரு விவாதம்

ஈழத் தமிழர்களின் நியாயம் சொல்வது போன்ற ஒரு மெல்லிய பொய்யான போலிப் போர்வையில் அவர்களை மேலும் அசிங்கப்படுத்தி…. இலங்கை ராணுவத்துக்கும் சிங்களப் பேரினவாத மனோ ‘பாவத்துக்கும்’ வக்காலத்து வாங்கும் ஒப நாதுவா ஒப ஏக்க படம் சென்னை வடபழனி ஆர்.கே வி ஸ்டுடியோவில் திரையிடப்பட்ட போது நான்  படம் பார்த்தேன்

(படத்தின் கதை பற்றிய எனது கட்டுரை செய்திகள் பக்கத்திலும் http://nammatamilcinema.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/  படத்தின் விமர்சனம் விமர்சனப் பகுதியிலும் http://nammatamilcinema.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%92/  இருக்கிறது )

படம் முடிந்ததும் இயக்குனர் பிரசன்ன விதனாகேவுடன் ஒரு நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இந்த மாதிரி விசயத்துக்கு எல்லாம் சிங்களர்கள் வரும்போது சில கைக்கூலி ஐந்தாம் படைத் தமிழர்களுடன் கூடவே வருகிறார்கள்.

இயக்குனரிடம் சிலர் கேள்வி கேட்க முயல,  அதற்கு  கவிஞரும் ஆடுகளம் படத்தில் நடித்தவருமான வி ஐ எஸ் ஜெயபாலனே தொடர்ந்து பதில் சொல்ல முயல , ஒருவர் எழுந்து” நீங்க சும்மா இருங்க… இயக்குனர் பதில் சொல்லட்டும்’ என்றார். உடனே தனது வயதுக்குரிய பக்குவம் கூட இல்லாமல் அவரை அசிங்கமாக திட்டினார் ஜெயபாலன் . இந்த சந்தோஷத்தில் ஒருவர் சிங்களத்திலேயே கேள்வி கேட்டு பிரசன்ன விதனாகேவை சந்தோஷப் படுத்தனார் .

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் நான் எழுந்து பிரசன்னாவிடம் போய் மைக்கை வாங்கி, கேள்விகள் கேட்க முயன்றேன் . அப்போது கும்பலாக  சிலர் எழுந்து ”படத்தின் ஹீரோ விடுதலைப் புலிகளை டெர்ரரிஸ்ட் என்று சொல்கிறான் அதை நீக்க வேண்டும்” என்றார்கள் . உடனே பிரசன்ன விதனாகே “அது அவனுடைய வெர்ஷன் . அதை நான் சொல்லவில்லையே , அதற்குதான் ஹீரோயின் பதில் சொல்கிறாளே” என்றார் . ஒரு சக படைப்பாளி என்ற முறையில் பிரசன்னாவின் அந்த பதிலை ஏற்றுக் கொண்ட நான் கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்.

” சரி .. அதுதான் உங்க வெர்ஷன் இல்லை . ஆனால் இதே படத்தில் தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்களை ராணுவம் தண்டிக்கும் என்று சொல்கிறீர்களே ? இது உங்கள் வெர்ஷன்தானே மன சாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நீங்கள் சொல்வது உண்மையா ?அப்படி தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த எத்தனை பேரை சிங்கள ராணுவம் கடுமையாக தண்டித்து இருக்கிறது ?” என்றேன் . மைக்கை வாங்கி ”ஸீ… தட் ஈஸ்… என்று ஆரம்பித்தவர் சம்மந்தமில்லாமல் பேசினார்  இயக்குனர் .

உடனே அங்கு இருந்த ஒரு இன மானம் மிக்க தமிழ்ப் பெண் அப்படி பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய ஒருவர் கூட இலங்கையின் எந்த கோர்ட்டிலும் ஆஜர் செய்யப்பட்டது கூட இல்லை என்று எனது கேள்வியை இன்னும் கூராக்கிக் கொடுத்தார் . மறுபடியும் உளறினார் பிரசன்ன

அடுத்து இயக்குனர் கவுதமன் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?” என்றார் அதற்கும் சரியான பதில் இல்லை .

மீண்டும் நான் பிரசன்னவிடம் “இந்தப் படத்துக்குப் பதில், தமிழ்ப் பெண்களை கற்பழித்த ஒரு சிங்கள ராணுவத்தானுக்கும் அவன் தமிழ்ப் பெண்ணை கற்பழிப்பதை வீடியோவில் பார்த்த அவனது மனைவிக்குமான வாழ்வை ஏன் படமாக எடுக்கக் கூடாது ?” என்று கேட்டேன்

“இல்லை இல்லை நான் தென்னிலங்கை மக்களுக்காக எடுத்த படம் இது” என்றார் . “உண்மையில் நான் சொல்கிற மாதிரியான கதைப் படம்தானே தென்னிலங்கை சிங்களப் பெண்களின் மனசாட்சியை உலுக்கும் ?. நீங்கள் ஒரு நல்ல படைப்பாளி என்றால் அதைத்தானே எடுத்திருக்க வேண்டும் ?’‘ என்றேன் .அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.  திக்கித் திணறி பதில் இல்லாமல் நின்றார் பிரசன்னா .

அடுத்து “இந்த சூழலில்  ஒரு ஈழத் தமிழ் ஆண், ஒரு சிங்களப் பெண் இருவருக்குமான காதலை சொல்லி இருந்தால்தானே . நீங்கள் ஆண்மை மிக்க படைப்பாளி ?” என்றேன் . “இல்லையில்லை . ஒரு ரஷ்ய சிறுகதையை எடுத்து அதில் தமிழ் சிங்கள கதாபாத்திரங்களை வைத்தேன்” என்றார் பிரசன்ன.

சிவப்பு சட்டைக்காரன்
சிவப்பு சட்டைக்காரன்

“அப்படி வேறு ஒரு உள்ளீடு உங்களுக்கு தேவை என்றால் , தான் விடுதலைப் புலியாக களம் ஆடியபோதும் தன்னை காதலித்த ஒரு சிங்களத்தியை கற்பழிக்காமல் பாலியல் பலாத்காரம் செய்யாமல் முறைப்படி மணந்து மனைவியாக்கி வாழ்ந்த கர்னல் நடேசனைப் பற்றியும்…… வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த நடேசனை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற போது…. அதைத் தடுத்து சிங்கள இராணுவத்தாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நடேசன் அண்ணனின் மனைவியும் சிங்களப் பெண்ணான அண்ணி ஊர்மிளாவைப் பற்றியும் படம் எடுத்து இருக்கலாமே ?” என்றேன் . அமைதியாக நின்றார் பிரசன்ன விதனாகே .

About Senthilkumaran Su

பெயர் சு.செந்தில் குமரன் புனைப் பெயர் ராஜ திருமகன் கல்வித் தகுதி B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (1986 ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி விகடன் மாணவ நிருபர் திட்டம் (1988- 89) மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது (1989 ) விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Senthilkumaran Su →