தனிமையில் இருக்கும்போதும் தவிப்பில் இருக்கும்போதும், 'நாம் செய்வது யாருக்கும் தெரியப் போவதில்லை' என்ற அலட்சிய, ஆணவ எண்ணத்தில் இருக்கும் போதும் ஒருவன் பயன்படுத்தும் வார்த்தைகளும் செய்யும் செயல்களுமே அவனது உண்மையான அடையாளம்.
இருக்கட்டும். பலருக்கும் உள்ளதுதான் !
ஆனால் ஒரு படுகேவலமான ஆபாச வார்த்தையை வைத்து பாடல் என்ற பெயரில் ஒரு சாக்கடையை இட்டுக் கட்டிமெட்டுப் போட்டுப் பதிவு செய்து போனில் வைத்துக் கொண்டு ஒருவன் வருஷக் கணக்காகக் கேட்டுக் கேட்டுக் கொண்டாடுகிறான் என்றால் ...
எழவு , அது எப்பேர்ப்பட்ட அழுக்கோ !
பெண்ணின் பிறப்புறுப்பை குறிப்பிடும் -- அரங்கத்துக்கு, சபைக்கு ஒவ்வாத -- ஆபசச்ச் சொல்லை நேரடியாகப் பயன்படுத்தி -- அதுவும் மீண்டும் மீண்டும் வரும்படியாக அதை பயன்படுத்தி .....
அனிருத் இசையில் சிம்பு எழுதிப் பாட, முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு, ஃபைனல் மிக்சிங் முடிக்கப்பட்டு, பொது வெளியில் வெளியிடும் அளவுக்கு சரி செய்யப்பட்ட பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி , பலரையும் அதிர்ச்சியும் அவமானமும் அடைய வைத்தது
பீப் ஒலி கொண்டு அந்த வார்த்தையை மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தை என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் திட்டமிட்டு குறைவான நீளத்தில் பீப் ஒலி போடப்பட்டுதான் பாடல் உள்ளது.
இணையத்தில் பெரும் எதிர்மறை விமர்சனங்களை இந்த பாடல் சந்தித்து வரும் நிலையில், இதை பாடிய சிம்புவுக்கும், இசையமைத்த அனிருத்துக்கும்
எதிராக கடும் விமர்சனங்கள் எழுகின்றன
"அந்தப் பாடல் எந்தப் படத்துக்காகவும் உருவாக்கப்பட்டதில்லை. நானும் அனிருத்தும் எங்கள் பொழுதுபோக்குக்காக உருவாக்கிக் கொண்ட பாடல் அது . யாரோ அதை என் போனில் இருந்து திருடி வெளியிட்டுவிட்டார்கள் " என்று கோபாவேசமாக பதில் சொல்கிறார் சிம்பு
"ஏண்டா நாயே .......!
ஏதோ கோபத்திலும் காமத்திலும் கெட்ட வார்த்தை பேசிக் கிளுகிளுப்பது இன்னிக்கு பலருக்கு இயல்புதான் . ஆனா அந்த வார்த்தையை பாட்டுல போட்டு ,அதுவும் திரும்பத் திரும்ப வர்ற மாதிரி போட்டு ... கம்போஸ் பண்ணி ரெக்கார்ட் பண்ணி .. பக்காவா ரெடி பண்ணி வருஷக் கணக்கா போன்ல வச்சுகிட்டு கேட்கற அளவுக்காடா நீ கேடு கெட்டவன்?
உன் போன்ல இருந்து யாரோ திருடி வெளியிட்டாங்கன்னு சொல்ற. உன் போன்ல இருந்து எப்படிடா யாரோ திருட முடியும் ? அந்த அளவுக்கு நீ தெருத் தெருவா பொறுக்குரியா? உன் போன் உன் வீட்லதானே இருக்கும் ? அப்போ, இந்தப் பாட்டை கேட்டு ரசித்து 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு வெளி விட்டது உன் வீட்டுல உள்ள ......"(போதும் பிளீஸ் !)
-- என்று , பலரும் சிம்புவின் வாதத்தை அடித்து உடைத்து, சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் கொந்தளிக்கிறார்கள்.
சிம்பு சும்மா இருந்திருந்தால் கூட, பிரச்னை ஆறிப் போய் இருக்கும் . ஆனால் சிம்புவின் திமிரான -- முட்டாள்தனமான பதில் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது
விளைவு?
பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ள நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோவை காவல் துறையில் புகார் அளித்த ஜனநாயக மாதர் சங்கத்தினர், சிம்பு - அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து இது தொடர்பாக புகாரினை அளித்தனர்.
அதன் அடிப்படையில் சமூக வலை தளங்களில் ஆபாசமான கருத்துக்களை பகிர்ந்தது பெண்களை இழிவுபடுத்தி பாடல் இயற்றியது, ஆபாசமாக பாடியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நடிகர் சிம்பு,இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகரகாவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்ட ஆலோசனைகள் பெற்று வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், முறையாக விசாரணை நடக்கும் என்றும் மாநகரகாவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
விரைவில் இருவரும் ஜெயிலுக்குப் போவது உறுதி என்றே கூறப்படுகிறது .
"ஜெயில்ல கைதிகளுக்கு வாராவாரம் சிக்கன் போடுவீங்களாமே .. அதக் கூட இவனுங்க ரெண்டு பேருக்கும் போடாதீங்க அந்தக் கொழுபுல அடுத்த பாட்டை எழுதப் போறானுங்க"
-- என்று இப்போதே கமென்ட் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் .
''ஊரில் உள்ள அயோக்கியனை எல்லாம் கண்டு பிடித்துக் கண்டிக்கும் 'தன்மான சிங்கம்'டி. ராஜேந்தர் , இதுவ ரை தன் மகனை கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏன் ?. ஊருக்குதான் உபதேசமா டி.ஆர் ? உண்மையிலேயே நீங்க தன்மான சிங்கம் என்றால் சிம்புவை வீட்டை விட்டே துரத்தி விட்டு அப்புறம் ஊர் நியாயம் பேச வாங்க'' என்று சமூக வலை தளங்களில் டி.ஆருக்கு எதிராகவும் கண்டனங்கள் .
சென்னை மழை வெள்ளத்தில் தேங்கியுள்ள குப்பையில் இருந்து வரும் துர்நாற்றம் கூட கம்மிதான் .