தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத் திரையில் கலை இயக்குநராக பணியைத் தொடங்கி , ‘திருதிரு துறுதுறு’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி, வாமணன் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராக ‘கலை’க்கியவர் டி ஆா் கே கிரண் .
ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் கலை இயக்குநராக பணியாற்றியவர்.
அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த டி ஆா் கே கிரண், இப்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.
விஷாலின் ‘பாயும் புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், சி.வி.குமார் தயாரிப்பில் நலன்குமார் சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் பெயரிடப்படாத படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் ஜிவா ராம்நாத் கூட்டணியில் திருநாள் படத்திலும் நடித்துவருகிறார்.
இவை மட்டுமல்ல ….. ‘வேலையில்லா பட்டதாரி – 2’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கும் டி ஆர் கே கிரண், மேலும், 3 புதிய படங்களில் முழுநேர நடிகராக நடிக்க உள்ளாராம்.