சினிமாக் காட்டில் காமெடி மழை

stills of appukutti , mithun ion enga kaatla mazhai film
கன மழைதான்

குள்ள நரிக் கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி  அடுத்து வாலி பிலிம் விஷன்ஸ் தயாரிப்பில் இயக்கும் படம் எங்க காட்டுல மழை.

மதுரை அருகே உள்ள கிராமத்தில் இருந்து வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு சென்னைக்கு வரும் கதாநாயகன் முருகன் , அவனது நண்பன் குபேரன் இவர்களின் புதிய நகர வாழ்க்கையில் நாயகனுக்கு மகேஸ்வரி என்ற பெண் மீது காதல் வருகிறது. ஆனால் அந்தப் பெண்  தன்னை மணக்க விரும்பும் ஒருவனின் பெயரை சொல்லி அவன் நல்லவனா கெட்டவனா என்று விசாரித்து சொல்ல வேண்டும் என்று சொல்ல .. அடுத்து அந்தர கந்தர சுந்தர காமெடிகள்தான் இந்த எங்க காட்டுல மழை படமாம் .

இப்படியாக காதலையும் காமெடியையும் கலந்து கட்டி உருட்டி புரட்டி பிசைந்து உருவாகும் இந்தப் படத்துக்கு குள்ளநரிக் கூட்டம் ஆதலால் காதல் செய்வீர் படங்களுக்கு வசனம் எழுதிய கிளைட்டன் வசனம் எழுத,  மேற்படி அதே ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஏ.ஆர் சூர்யாவின் ஒளிப்பதிவு செய்ய  இசை அமைத்து இருக்கிறார் ஸ்ரீவிஜய்.

கதாநாயகனாக சென்னையில் ஒரு நாள் படத்தில்  நடித்த மிதுன் நடிக்க  சுருதி ராம கிருஷ்ணன் கதாநாயகியாக நடிப்பு மீட்ட,  இவர்களுடன் அப்புக் குட்டி , மதுமிதா, அருள்தாஸ், சாம்ஸ் ஆகியோர் நடிக்க , மிக முக்கிய வேடத்தில் டக்ளஸ் என்ற நாமகரணம் கொண்ட காதாபாத்திரத்தில் நடிக்கிறார், சென்னையைச் சேர்ந்த கோல்டன் ரெட்ரிவல் என்ற நாயார் . (பேரைப் பார்த்த உடனே யாரோ ஹாலிவுட் நடிகைன்னு நினைச்சீங்களோ ?)

படத்தில் ஹீரோ ஹீரோயின் ஹீரோவின் நண்பன் யாருக்கும் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லை . ஆனால்  டக்ளசுக்கு பக்கம் பக்கமாய் பக்கா பக்காவாய் பஞ்ச் டயலாக் இருக்கிறதாம்.

stills of appukutti and mithun in enga kaatla mazhai
மைன்ட் வாய்ஸ் மகா நடிகன்

எப்பூடி சார் என்று இயக்குனரிடம் கேட்டால் எல்லாமே மைன்ட் வாய்ஸ்தான் சார். ஆனா காமெடி பட்டையை கிளப்பும் . நானே டப்பிங் வாய்ஸ் கொடுக்கப் போறேன்” என்கிறார்.  படத்தில் நிறைய காட்சிகள்  நாயாருக்கும் அப்புக்குட்டிக்கும் தானாம் . நாய் மட்டும் நாப்பது நாள் கால்ஷீட் கொடுத்து நடிச்சிருக்காம் . (அப்ப கண்டிப்பா ஹீரோயினை விட  பெரிய கேரக்டராதான் இருக்கும் )

About Senthilkumaran Su

பெயர் சு.செந்தில் குமரன் புனைப் பெயர் ராஜ திருமகன் கல்வித் தகுதி B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (1986 ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி விகடன் மாணவ நிருபர் திட்டம் (1988- 89) மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது (1989 ) விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Senthilkumaran Su →