எம்ஜிஆர் , நம்பியார் …. பவர் ஸ்டார் !

stills of srikant and vandhana

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது முடியாத போது வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது ரூட்டில் தனது கேரியர் காரை இப்போது திருப்பி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த் . தனது மனைவி வந்தனா ஸ்ரீகாந்தின் தயாரிப்பில்  கோல்டன் பிரைடே (தங்க வெள்ளிக் கிழமை ) என்ற நிறுவனத்தின் பெயரில் (வாவ்! வாட் எ  நேம்!)தயாரிப்பாளராகி அவர் நடித்து இருக்கும் படம் நம்பியார் .

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எம்ஜிஆர் என்ற நல்லவனும் உண்டு . (சினிமாவில் வருகிற) நம்பியார் என்ற கெட்டவனும் உண்டு .நிறைய பேரு வெளிய எம்ஜிஆரா காட்டிக்குவாங்க. ஆனா உள்ளுக்குள் நம்பியாரா இருப்பாங்க. ஆனால் தனக்குள் இருக்கும் அந்த  நமபியாரை ஜெயித்து எம்ஜிஆரை வளர்த்தால் ஒரு மனிதன் முன்னேற முடியும்’ என்ற கருத்தியலில் போகும்  இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தின் பெயரே ராமச்சந்திரன்தான்.  ஸ்ரீகாந்துக்குள் இருக்கும் நம்பியார் (குணம் ) வெளிப்படும்போது அதற்கு ஒரு உருவம் கொடுத்து (எஸ் ஜே சூர்யாவின் அ ஆ படப் பாணியில்? ) உலவ விட , அந்த உருவமாக வருபவர்தான் சந்தானம் . கதாநாயகி சுனைனா (மெயிண்டனன்ஸ் சூப்பர் சுனை)

சுனைனா ஸ்டில்
அந்த மெயிண்டனன்ஸ் …!.

படத்தில் நட்புக்காக ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்து இருக்கிறார் ஆர்யா
இப்படி ஒரு சிறப்பான ஐடியாவுடன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கும்  இந்தப் படத்தின் இயக்குனர் கணேஷ் ஷா தமிழில் விக்ரமன் தெலுங்கில் ராஜ மவுலி ஆகியோரிடம் பணியாற்றியவர்.

படத்தின் விஜய் ஆண்டனியின் இசையில் ஒரு ஸ்லோ பீட் குத்துப் பாடலை பாடியும் இருக்கிறார் சந்தானம் . அதாவது ஸ்ரீகாந்துக்குள் இருக்கும் நம்பியார் பாடுவது போன்ற அந்தப் பாடல் அது. (பொதுவா ஒகே தான் . ஆனால் ராகம் இழுக்கும்போதோ அல்லது உச்சஸ்தாயில் பாடும்போதோதான் , வேகமா வர்ற கண்டெய்னர் கவிழ்ந்து ரோட்டை தேய்ச்சுகிட்டு போறமாதிரி இருக்கு சந்து .ஆனாலும்  நீங்க பாடறீங்க என்பது சுவாரஸ்யமான விஷயம்தான்).

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சரத்குமார் , சூர்யா , ஆர்யா, ஜீவா, ஷாம் , பார்த்திபன் , சமுத்ரகனி , நமீதா என்று அமெரிக்கன் எம்பசி அப்ளிகேஷன் கியூ மாதிரி நீண்ட வரிசை .  இந்தப் படத்தின் ஆடியோ பிறந்த அதே நாள்தான் வந்தனா ரிலீஸ் ஆன நாள் என்பதால் அவருக்கு தயாரிப்பாளருக்கான பாராட்டுக்களோடு பிறந்த நாள் வாழ்த்துகளும் நிறைய கிடைத்தன . அவர்களில் முக்கியமானவர் வந்தானாவின் தம்பியான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் (அப்படிதாங்க அவரு சொல்லிக்கிட்டாரு)

பவர்ஸ்டார் பேச எழுந்தபோது எழுந்த கைதட்டலை ஆச்சர்யப் புன்னகையோடு கவனித்தார் சூர்யா . நான் உண்மையிலேயே பவர் ஸ்டாரின் ரசிகன் ” என்று ஷாம் பேசியபோது அந்த புன்னகை ஆச்சர்யம் பார்வையாளர்கள் பக்கமும் தொற்றியது . நமீதா ஸ்ரீகாந்தை மச்சான் என்று சொன்னபோது தன் மனைவியை திரும்பிப் பார்த்து அதிர்ச்சி சந்தோசம் காட்டினார் ஸ்ரீகாந்த்

நம்பியார் பட இசை வெளியீடு
நம்பியார் பாடும் பாட்டு

“சில பேரு வாழ்க்கையில சில பொண்ணுங்க வந்தனா போனனான்னு இருப்பாங்க . ஆனா ஸ்ரீகாந்த் மனைவி  வந்தனா அப்படி இல்லாம அவரை வைத்து தனது குடும்பத்தினர் உதவியோடு படம் தயாரித்துக் கொடுத்தும் உதவுவது பெரிய விஷயம் ” என்றார் பார்த்திபன்

நம்பியார் விழாவில் நமீதா
நமீதா 40 டிகிரி

 

சூர்யா பேசும்போது ” ரோஜாக்கூட்டம் வெளியான போது ஒரு பத்திர்க்கைக்கு ஸ்ரீகாந்த கொடுத்திருந்த பேட்டியில் நீ குப்பை கூட்டுபவனாக இருந்தாலும் சிறந்த குப்பைக் கூட்டுபவனாக நீதான் இருக்க வேண்டும் ‘ என்று அறிவுரை சொன்னதாக கூறி இருந்தார் . அந்த அறிவுரையை நானும் எடுத்துக் கொண்டேன் ” என்றார்.

படத்தின் போஸ்டரில் எம்ஜிஆர் சிலையின் பின்னால் நம்பியார்களான ஸ்ரீகாந்த் , சந்தானம் இருவரும் ஒளிந்து கொண்டிருக்கும் காட்சி பலரின் கவனத்தையும் கவர்கிறது . வந்தனா-

ஸ்ரீகாந்த் தயாரிக்கும் இந்தப் படமும் மித்திரன் ஜவஹரின் இயக்கத்தில் அவர்கள் உருவாக்க இருக்கும் அடுத்த படமும் .. இரண்டும் ஜெயிக்கட்டும் .

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →