கால்ஷீட் சொதப்பல் கசமுசாஸ் ; ஸ்ரீதிவ்யாவுக்கு ‘ரெட்’ கார்டு ?

sri div
முயல் குட்டி மாதிரி முகத்தை வைத்திருக்கும் இந்த பெண்ணுக்கு முள்ளம்பன்றி மாதிரி குத்திக் கிழிக்கும் குணமா என்று ஆச்சர்யமாகக் கேட்டால் “அட நீங்க வேற . ஒரு யானை சைசுக்கு முள்ளம்பன்றி இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படிதான் அவங்க குணம் ” என்கிறார்கள் , ஸ்ரீதிவ்யாவைப் பற்றி .
‘காய்த்த மரத்தில் அடிக்க நம்மள கல்லாப் பயன்படுத்திக்காதீங்க நட்பூஸ்…’  என்று ஒரு ரெக்வெஸ்ட் கொடுத்து விட்டு கூடவே காதையும்  கொடுத்தால் ”உண்மைய சொன்னாலே ஒரு வண்டி விஷயம் இருக்கு . இதுல பொய் சொல்லி என்ன பண்ணப் போறோம்?” என்கிறார்கள் மனப் பூர்வமாக .
தனக்கு முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த ஒரு டைரக்டரின் எதிர்காலத்தை அழிக்க வரிந்து கட்டிக் கொண்டு ஸ்ரீதிவ்யா செயல்படுகிறார் என்பதுதான் அந்த அதிர்ச்சியான சமாச்சாரம் . sri div 5
விறுவிறுப்பு ஏறி ”விளக்கமா சொல்லுங்க” என்றால்,  ஒவ்வொரு வார்த்தையும் பெருமூச்சில் பிசைந்து கொண்டு வருகிறது.
பஸ் ஸ்டாப் என்ற ஒரு தெலுங்குப் படத்தில் மட்டும் நடித்திருந்த ஸ்ரீதிவ்யாவின் போட்டோவைப் பார்த்து , முதன் முதலில் அவரை தமிழுக்கு அழைத்து வந்து வாய்ப்புக் கொடுத்தார் மங்களேஸ்வரன் என்ற இயக்குனர் . படத்தின் பெயர் காட்டு மல்லி . தயாரிப்பு நிறுவனம் பாலாஜி பிலிம்ஸ். தயாரிப்பாளர் லக்ஷா ராம் . ஹீரோ விதார்த் .

முதல் படத்திலேயே மூன்று லட்ச ரூபாய் சம்பளம்….ஹீரோ ‘மைனா புகழ்’ விதார்த்….அட்டகாசமான கதை…இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு . வேறென்ன வேண்டும் ஓர் அறிமுக நடிகைக்கு ? எனவே ரொம்ப நல்ல பிள்ளையாகவே  ‘நடித்தார் ‘  ஸ்ரீ திவ்யா .

sri div 4
அப்போது பார்த்து சினிமா ஸ்ட்ரைக் வந்து பனிரெண்டு நாட்களிலேயே ஷூட்டிங் பேக்கப் ஆனது .

அந்த நேரம் பார்த்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு கதாநாயகி வேட்டையில் இருந்த அதன் இயக்குனர் பொன் ராமை வாய்ப்புக் கேட்டு சந்தித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா . பஸ் ஸ்டாப் தெலுங்குப் படத்தின் ஸ்டில்களில் அவ்வளவாக திருப்தி அடையவில்லை பொன் ராம்.

பதறிப் போய் , காட்டுமல்லி படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரனிடம் விஷயத்தை சொன்ன ஸ்ரீதிவ்யா , தான் நடித்து நன்றாக வந்து கொண்டிருக்கும் காட்டு மல்லி படத்தின் ஸ்டில்களை கொடுத்து உதவும்படி பணிவோடு கேட்டு இருக்கிறார் .

‘நாம தமிழில் அறிமுகப் படுத்தும் கதாநாயகி ஓகோ என வரட்டும்’ என்று நினைத்த மங்களேஸ்வரன் நல்ல எண்ணத்தோடு காட்டுமல்லி படத்தின் ஸ்டில்களை ஸ்ரீதிவ்யாவுக்கு கொடுத்து உதவி இருக்கிறார் .

அந்த ஸ்டில்களை பார்த்து அசந்துபோன பொன் ராம் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஸ்ரீதிவ்யாவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்த்துக்கு கதாநாயகியாக முடிவு செய்தார் . (அந்த ஸ்டில்களைதான் இப்போது நீங்களும் பார்த்து அசந்து கொண்டு இருக்கிறீர்கள் )

Actress Sri Divya in Kattu Malli Movie Stills

சிவகார்த்திகேயனும் ஏற்றுக் கொள்ள , வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு ஒப்பந்தம் ஆனார் ஸ்ரீதிவ்யா . அதன் விளைவாக தெலுங்குப் பட உலகிலும் ஸ்ரீ திவ்யாவுக்கு மவுசு ஏறியது. அங்கிருந்தும் வாய்ப்புகள் வரத் துவங்கின .

இந்த நிலையில் ஓர் அசுப யோக அசுப தினத்தில்  ” ஒப்பந்தமான ஒரு படத்தை முடித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது . முடித்து விட்டு சில நாட்களில் வந்து விடுவேன் ” என்று  உறுதி மொழி கொடுத்து விட்டு , காட்டு மல்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பினார் ஸ்ரீதிவ்யா ,

Kattu Malli Movie Stills

அது ஆச்சு மாசக் கணக்காய். . . .

அதன் பின்னர் இன்றுவரை காட்டு மல்லி ஷூட்டிங்கிற்கு வரவே இல்லை ஸ்ரீ திவ்யா .

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சூப்பர் ஹிட் ஆனது . (அடுத்த படத்துக்கு கால்ஷீட் கேட்டுப் போன பொன் ராமிடம் ஸ்ரீதிவ்யா கேட்ட சம்பளம் பொன் ராமுக்கே மயக்கம் வர வைத்தது. அவர் தட்டுத் தடுமாறி சகஜ நிலைக்கு வந்தார் என்பது வேறு,  தனிஈஈஈஈ….  கதை! )

இந்த நிலையில் எல்லா வலிகளையும் மறைத்துக் கொண்டு மீண்டும ஸ்ரீதிவ்யாவிடம் கால்ஷீட் கேட்டுப் போனது காட்டு மல்லி யூனிட் . அங்கேதான் டுவிஸ்ட் கொடுத்தார் ஸ்ரீதிவ்யா

” இப்போ நான் பெரிய ஹீரோயின் ஆயிட்டேன் . விதார்த்துக்கு இப்போ மார்க்கெட் இல்ல . அதனால வேற ஹீரோவ போட்டு மறுபடியும் முதல்ல இருந்து ”  புரோட்டா சாப்பிடலாமா , அடச்சே! “எடுக்கலாமா ?” என்று கேட்டாராம் ஸ்ரீதிவ்யா .

sri div 2

அப்படியே ஆடிப் போனது படக் குழு . படத்தின் பல முக்கியக் காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாலும் கேரக்டருக்கு விதார்த் மிக பொருத்தமாக இருப்பதாலும் ஹீரோவை மாற்றுவது நியாயமில்லை என்பதாலும் அந்த யோசனையை ஏற்கவில்லை  காட்டு மல்லி படக் குழு .

அவ்வளவுதான் .  ஆரம்பத்தில் டைரக்டர் மங்களேஸ்வரனுக்கு போன் போட்டு ”சாப்ட்டீங்களா ? தூங்கி எழுந்துட்டீங்களா ? பல் விளக்கிட்டிங்களா ? என்ன கம்பெனி பிரஷ் ?  பிரஷ்ல உள்ள குச்சி எல்லாம் வளையாம இருக்கா? ” என்றெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீதிவ்யா,  அதன் பிறகு மங்களேஸ்வரன் உட்பட,  காட்டு மல்லி படம் சம்மந்தப்பட்ட யாருடைய போனையும் எடுக்கவில்லை .

ஒரு நிலையில் பொறுமை இழந்த படக் குழு ஸ்ரீதிவ்யாவின் மேனேஜரான ஆண்டனி என்பவரை  நெருக்க,  அவர் மூலம் பேசிய ஸ்ரீதிவ்யா ”சென்னை வரும்போது பேசலாம்” என்பாராம். சொன்னபடி  வாக்குத் தவறாமல் சென்னைக்கு வந்தெல்லாம் போவாராம் . ஆனால் காட்டு மல்லி படம் சம்மந்தப்பட்டவர்களை மட்டும் சந்திக்கவே மாட்டாராம் . இந்தக் கண்ணாமூச்சி வேறு நான்கைந்து தடவை தொடர்ந்திருக்கிறது .

sri div 6

கொதிநிலைக்குப் போன படக் குழு மேனேஜரிடம் குரலை உயர்த்த ” ஐயோ சார் . ஸ்ரீதிவ்யாவை விட அவங்க அம்மா நாலு மடங்கு பெரிய டார்ச்சர் சார் . ஒண்ணு சொல்வாங்க . அப்புறம் அவங்களே இல்லன்னு மாத்தி மாத்திப் பேசுவாங்க . இந்த விசயத்துல என்னை விட்ருங்க ” என்று ஜகா வாங்கிவிட்டாராம் .

“விதார்த்தை மாற்றவும் முடியாது . ஸ்ரீதிவ்யா இல்லாமல் படத்தை முடிக்கவும் முடியாது . ஸ்ரீதிவ்யா வளர்ந்து விட்டார் என்பதை நாங்களும் உணர்கிறோம் . எனவே அவர் மேற்கொண்டு சம்பளம் பற்றியாவது சொல்ல வேண்டும் . எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்பதற்கும் பதில் சொல்ல மறுக்கிறார் ” என்கிறது காட்டுமல்லி படக் குழு .

இதில் பெரிய காமெடி என்னவென்றால் , காட்டு மல்லி படத்தின் தயாரிப்பாளர் லக்ஷா ராம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணனின் சொந்தச்   சகோதரர் ! எப்படி இருக்கு சமாச்சாரம் ?

sri div 8பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போன காட்டு மல்லி படக் குழுவுக்கு ஆதரவாக , இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் களம் இறங்கி இருக்கிறது . நேரடியாக ஸ்ரீ திவ்யா தயாரிப்பார் சங்கத்துக்கு வர வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

கண்டிப்பாக ஸ்ரீதிவ்யா நடிகர் சங்கத்தை அணுகுவார் . நடிகர் சங்கப் பிரதிநிதி ஒருவரோடு தயாரிப்பாளர் சங்கத்துக்கு  வருவார் என்கிறார்கள். சமாதானத்துக்கு ஸ்ரீதிவ்யா சம்மதிக்கவில்லை என்றால் அவருக்கு ரெட் கார்டு போட்டு தமிழ் படங்களில் நடிப்பதற்கே தடை  விதிக்கும் முடிவும் எடுக்கப்படலாம் என்கிறார்கள்.

sri div 7

அடங்கப்பா … ஊதா கலரு ரிப்பனுக்குள்.  இவ்வளவு கருப்புக் கறைகளா ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →