மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேய்ஸ் படத்தின் ரீமேக், ஆர்யா,(துல்கர் ரோல்) பாபி சிம்ஹா,(நிவின் பாலி ரோல்) ராணா டகுபட்டி (ஃபகத் ஃபாசில் ரோல் ), சமந்தா,(நித்யா மேனன் ரோல்) ஸ்ரீதிவ்யா(நஸ்ரியா) ஆகியோர் நடிக்க,
(அடைப்புக் குறிப்புக்குள் இருப்பது மலையாளத்தில் நடித்த நடிக நடிகையரின் பெயர்கள்) பெங்களூர் நாட்கள் என்ற பெயரில் தமிழில் உருவாகி, இன்று வெளியாகிறது.
மலையாளத்தில் நடித்த வேடத்தில் தமிழிலும் பார்வதியே நடிக்கிறார். தவிர லக்ஷ்மி ராய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் உண்டு .
பொம்மரிலு பாஸ்கர் என்ற பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்க, தமிழ் , பிவிபி புரடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது .
இதையொட்டி நேற்று இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர், நிர்வாக தயாரிப்பாளர் ராஜீவ், நடிகை பார்வதி மேனன் , ஒளிப்பதிவாளர் கே வி குகன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
உற்சாகமாகப் பேசிய பாஸ்கர் ”
பொதுவாக கசின்ஸ் எனப்படும் – சகோதர சகோதரிகளின் பிள்ளைகளுக்கு – இடையிலான உறவு மற்றும் நட்பை படங்கள் அதிகம் பேசியது இல்லை.
ஆனால் அது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். என் வாழ்க்கையிலேயே சிறு வயதில் என்னோடு என் கஸின்களை அவங்க அப்பா அம்மா சேர விடமாட்டாங்க.
அதனால ஒரே தெருவுல என்னை பாக்காத மாதிரி அவங்க நடந்துக்குவாங்க . ஆனா அப்படியே வெளிய வந்து தியேட்டர்ல படம் பார்த்து கூத்தடிப்போம் . பிறகு வீட்டுப் பக்கம் போனதும் ஒருத்தரோட ஒருத்தர் பழகாத மாதிரி நடந்துக்குவோம் .
அப்படிப்பட்ட அழகான கஸின் உறவை வச்சு, பெங்களூர் டேய்ஸ் படம் வந்து மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்றது .
அதனால் தமிழில் பெங்களூர் நாட்கள் படத்தை மேலும் சிரததையாக எடுத்து உள்ளேன் . அந்தப் படத்தைப் பார்த்து அது போலவே நடிக்க வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை.
அவரவர் ஸ்டைலில் நடிக்க வைத்துள்ளேன். அதே நேரம் அந்த படத்தில் இருக்கும் நல்ல விசயங்களை மிஸ் பண்ணவில்லை . ஆனா திரைக்கதையில் பல விசயங்களை புதுசா டிரை பண்ணி இருக்கோம் .
பெங்களூர் டேய்ஸ் மலையாளப் படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் நம்ம பெங்களூர் நாட்கள் படத்தோட டிரைலர் பார்த்துட்டு ரொம்ப பாராட்டினார் ” என்றார் .
ஆழமாகப் பேசும் பார்வதி “
மலையாளப் படத்துல பண்ணின அதே கேரக்டரை தமிழிலும் பண்ணி இருக்கேன் . அஞ்சலி மேனன் ஒரு படத்தை ரீமேக் பண்ணுவாரான்னு கேட்டா பண்ண மாட்டார் .
ஆனால் பொம்மரிலு பாஸ்கர்க்கு அந்த தைரியம் இருக்கு . மலையாளப் படததில் அஞ்சலி மே னன் கேட்ட மாதிரி நடிச்சேன் . இங்க பாஸ்கர் விரும்பிய மாதிரி நடிச்சேன்.
ரெண்டு பெரும் அவங்க அவங்க பாணியில் அவங்க விரும்பின மாதிரி சிறப்பா எடுத்து இருக்காங்க. ரெண்டுமே எக்ஸலன்ட் படங்கள் ” என்றார் .
ஒளிப்பதிவாளர் குகன்
” மலையாளப் படத்துக்கு அந்த ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருந்தார் . அது எனக்கு ஒரு சவாலாக இருந்தது .
அதற்கேற்ப படம் முழுக்க ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன் .” என்றார் .
நிர்வாகத் தயாரிப்பாளர் ராஜீவ்
” படம் சிறப்பாக வந்திருக்கிறது . அனைத்து தரப்பினரையும் கவரும் படம் இது . உலகமெங்கும் ஐநூறு தியேட்டர்களில் வெளியாகிறது .
தமிழகத்தில் முன்னூறு தியேட்டர்களில் வெளியாகிறது ” என்றார்