நடுக் காட்டில் நள்ளிரவில் பேயுடன் ஒரு பயணம் !

bayam 4

ஆக்டோஸ்பைடர் புரடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் இருவரும் தயாரிக்க, பரத் , விஷாகா சிங் , மீனாக்ஷி தீட்ஷித் நடிப்பில் மணி ஷர்மா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பயம் ஒரு பயணம் . 

”பயம் என்பது ஓர் உணர்வுதானே . அது எப்படி பயணமாகும்?”  என்று மனிஷர்மாவிடம் கேட்டால்
bayam 9999
“அந்த உணர்வு தொடர்ந்து ஒரு பயணத்தில் நீடிக்கிறது என்பதை வைத்து அந்தப் பெயர் வைத்துள்ளேன். 
இது ஒரு பேய்ப் படம்தான். ஆனால் வழக்கமான பேய்ப் படங்களில் எல்லாம் ஒரு பங்களா அல்லது வீட்டுக்குள் பேய்  இருக்கும். அங்கே போகிறவர்களுக்கு பிரச்னை வரும் . ஆனால் இந்தப் படத்தில் ஒரு காட்டுக்குள்
bayam 999
எங்கே இருந்து எப்போது வேண்டுமானாலும் பேய் வரும். நீங்க தப்பிக்கவே முடியாது ” என்கிறார் . 
ஆத்தாடி … அப்படி என்ன கதை ?
“வனவியல் புகைப்படக்கார இளைஞர் ஒருவர் , காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்குள் தங்கி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் .
bayam 1
ஆறு மணி நேரத்துக்குள் அந்தக் காட்டைக் கடந்து அவர் வரவேண்டும். ஆனால் மூன்று நாட்கள் ஆகிறது . அதிலும் ஒரு இரவு என்பது முக்கியமானது . 
அடர்ந்த காட்டில் தரையே வீடாகவும் வானமே கூரையாகவும் உள்ள சூழலில் அந்த இரவில் பேயிடம் சிக்கும் அந்த புகைப்படக்காரருக்கு
bayam 888
என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் கதை” என்கிறார் அவரே .
படத்தில் என்ன ஸ்பெஷல் ?
“பொதுவாக இப்போது பேய்ப் படம் என்றால் அதை காமெடி கலந்து எடுப்பது எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது .
bayam 99
ஆனால் இது முழுக்க முழுக்க சீரியசான பேய்ப் படம் . காமெடியும் இருந்தாலும் திகில்தான் இந்தப் படத்தின் பலம் .
விஷாகா சிங் நாயகியாகவும் பேயாகவும் நடிக்கிறார் . நாயகனின் மனைவியாக — இன்னொரு கதாநாயகியாக மீனாக்ஷி தீட்ஷித் நடிக்கிறார் . 
bayam 7
அண்மைக்  காலமாக காமெடி கேரக்டரில் அதிகம் நடித்து வந்த நடிகை ஊர்வசி இந்தப் படத்தில்  விசாகாவின் அம்மாவாக ஒரு சீரியசான  கேரக்டரில் நெகிழ்ச்சியூட்டும்படி நடித்துள்ளார். அவரது கணவராக ஜான் விஜய் நடிக்கிறார் . படத்தின் வில்லன் இவர்தான் . 
bayam 3
நாயகனின் நண்பனாக முனீஸ்காந்த் நடிக்க , மற்றும் சிங்கம் புலி , யோகிபாபு போன்றோரும் நடிக்கிறார்கள்” என்கிறார் .
” படத்தில் நான்கு இனிமையான பாடல்கள் இருக்கிறது .  
படத்தின் பெரும்பகுதியை  மூணாறு காட்டுப் பகுதியில் அடர்ந்த காட்டில் இரவிலேயே எடுத்தோம் . அதுவும் 
bayam 6
அட்டைக் கடிக்கு பயந்தபடி . அதுவே எங்களுக்கு ஒரு திகில் அனுபவமாக இருந்தது. 
ஆனால் படத்தில் இந்த இரவு நேர வன காட்சிகள் ரசிகர்களுக்கு இதுவரை உணர்ந்திராத அனுபவத்தைத் தரும் .”என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் துரையும் சண்முகமும் . 
பயம் ஒரு பயணத்துக்குக் கிடைக்கட்டும் … வெளியீட்டில் ஒரு வெற்றி ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →