சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் படம்.
பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியில் இந்தியாவின் நலனுக்கான செயல்பட்டு வரும் ரா மற்றும் ராணுவ அதிகாரி (விஜய்), கொடிய தீவிரவாதி ஒருவனை பிடிப்பதற்காக ஏந்திய ஆயுதத்தின் பலனாக ஓர் அப்பாவிக் குழந்தை இறந்து போகிறது.
அதனால் மனம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இருக்கும்போது வணிக வளாகம் ஒன்றில் அவர் இருக்கும் நேரம் பார்த்து தீவிரவாதிகள் வணிக வளாகத்தைக் கைப்பற்றி , அந்தக் கொடிய தீவிரவாதியை விடுவிக்காவிட்டால் எல்லா மக்களையும் கொன்று விடுவோம் என்று மிரட்ட .. ஆமா அதுதான் பீஸ்ட்.

விஜய் அழகாக ஆடுகிறார் . நடிக்கிறார் ஹீரோயிசம் செய்கிறார் . இந்தித் திணிப்புக்கு எதிராக அவர் பேசும் வசனம் பெருமிதம் . வாழ்த்துகள் விஜய் .
படத்தில் ஈர்ப்பு சக்தி அரபிக் குத்து பாடல். தீம் மியூசிக், எண்டு டைட்டில் என்று திரும்ப திரும்ப அந்தப் பாட்டை படத்தில் அடித்து துவைத்தும் அலுக்கவில்லை.
பூஜா ஹெக்டேவுக்கு வேலை கம்மி . நிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கு வேலை கம்மி. ஆனாலும் நகைச்சுவை இருக்கு . செல்வராகவன் கவனம் கவர்கிறார்.

மத்தாப்பு கொளுத்துகின்றன சண்டைக் காட்சிகள் . லாஜிக் லக லக
எளிமையாக ஆரம்பித்து , பரபரப்பாக பயணித்து , இடைவேளைக்குப் பிறகு சோர்ந்து கடைசியில் சுதாரித்து சுறுசுறுப்பாகி கடைசியில் கெத்துக் காட்டி முடிகிறது .
மொத்தத்தில்
பீஸ்ட்.. ஃபீஸ்ட் இல்லை என்றாலும் பட்டினி போடவில்லை