வி எல் எஸ் ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரிக்க, அட்டகத்தி தினேஷ், நகுல், பிந்து மாதவி , ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில் ராம் பிரகாஷ் ராயப்பா என்பவர் கதை திரைக்கதை எழுதி இயக்கும் படம் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்.
இந்த நாள் இந்த நேரம் இந்த நொடி முதல் நமது செல்போன்கள் எதுவுமே வேலை செய்யாது போனால் என்ன நடக்கும்ம் என்பதுதான் படத்தின் கதையாம் .
ஒரு ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி உரிமையாள இளைஞன் (தினேஷ்) , படித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் ஒரு இளைஞன் (நகுல்) , ஒரு கால் டாக்சி டிரைவர் (எதிர்நீச்சல் சதீஷ் ) என்று மூன்று டிராக்குகளில் சொல்லப்படும் இந்தக் கதை ஒரு புள்ளியில் இணையும் என்கிறார் இயக்குனர் .
பாடல் வெளியீட்டை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டு பாடல்களை திரையிட்டனர். அட்டகத்தி தினேஷ் ஒரு பாடலில் பாடி ஆட, இன்னொரு பாடலில் நகுலின் விஞ்ஞான விளையாட்டுக்களையும் அதை பார்த்து அவரது காதலியின் தோழி வெருண்டு ஓடுவதையும் சுவாரஸ்யமாகக் காட்டினார்கள் .
அதில் ஒரு காட்சியில் நகுல் சாக்கடைக் கால்வாயில் இருந்து நேரிடையாக ஒரு சிறு பாட்டிலில் மீத்தேன் வாய்வை சேகரிக்கிறார் . ‘சாக்கடைக்குள்ள இவன் என்ன பண்றான்..’ என்று அவரது காதலியும் காதலியின் தோழியும் சந்தேகப்பட்டு அருகில் வர , நகுல் அந்த சிறிய பாட்டிலை திறந்த உடன், உள்ளே இருந்து புயல் போல காற்று வெளிவந்து அந்த தோழியின் முகத்தையும் கன்னத்து சதைகளையும் அதிர வைக்கிறது . அந்த பெண் தெறித்து ஓடுகிறார்.
சிறிய பாட்டிலில் இருந்து வரும் மீத்தேன் வாயு அப்படி புயல்போலவா வரும் ? என்று இயக்குனரிடம் கேட்டபோது ”இல்லை சார் காமெடி மற்றும் சுவாரஸ்யத்துக்காக அப்படி வைத்தேன்” என்றார் (படிக்கிற புள்ளைக படம் பார்த்தா உண்மைன்னு நம்பிடாதோ ?காமெடிக்கு தவறை அழுத்தலாமா?)
” சிலுக்குக்கு அப்புறம் அந்த கவர்ச்சியான பார்வையும முகமும் பிந்து மாதவிக்கே இருக்கு” என்று சதீஷ் சொன்னபோது , அதை ஏற்பதா மறுப்பதா என்று குழம்பி, கொஞ்சம் லேட்டாக ஆளை விடுங்க சாமி என்பது போல, ஒரு கும்பிடு போட்டார் பிந்து மாதவி .
தனக்கு தயாரிப்பாளரை அறிமுகப்படுத்திய தூங்கா நகரம் பட இயக்குனர் கவுரவுக்கு நன்றி சொன்னார் பிரகாஷ் ராயப்பா
படத்தின் தலைப்புக்கு பொருத்தமாக மதன் கார்க்கி எழுதி இருக்கும்…
என்ற பாடல் வரிகள் அருமை.