ஸ்ரீராம் சிவராமனோடு இணைந்து எழுதி தயாரித்து, விக்ரம் ஸ்ரீதரன் இயக்க, சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ் ஷபீர், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி ஆர் வரலக்ஷ்மி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பர்த் மார்க் ‘. தமிழில் பிறப்புக் குறியீடு
சிசேரியன் இல்லாத இயற்கை முறையில் மலைப்பாங்கான காட்டில் பிரசவம் நடைபெறச் செய்ய மனைவியை அழைத்துக் கொண்டு போகும் கணவன், அவர்களுக்கு இடையேயான பாசம் மற்றும் பிரச்னைகள், அங்கு அவர்கள் சந்திக்கும் வேறு சில மனிதர்கள் அவற்றின் விளைவுகள் என்ன என்பதே படம்.
படம் குறித்துப் பேச பத்திரிக்கையலர்களைச் சந்தித்தார்கள் ஸ்ரீராம் சிவராமனும் விக்ரம் ஸ்ரீதரனும் . படத்தின் டிரைலரும் பாடல்களும் திரையிடப்பட்டன .
அட்டகாசமான லொக்கேஷன், விஷால் சந்திர சேகரின் சிறப்பான இசை , உதய் தங்கவேலின் ஒளிப்பதிவில் அழகான ஃபிரேம்கள் , வினீஷ் விஜயனின் சிறப்பான பிராஸ்தடிக் மேக்கப்பில் கர்ப்பிணி வயிறு யாவும் நன்றாக இருந்தன . பாடல் வரிகளில் குழப்பம் .ஸ்ரீராம் சிவராமனும் விக்ரம் ஸ்ரீதரனும் பேசும்போது ” மூணாறுக்கு அருகில் உள்ள மறையூர் என்ற மலைக் கிராமத்தில் படப்படிப்பிடிப்பு நடத்தினோம் . கிட்டத்தட்ட நாற்பது நாட்கள். செல்போன் கூட இல்லாத நிலை . எந்த புற அழுத்தமும் இல்லாமல் கேரக்டர் மூடிலேயே இருந்து நடித்துக் கொடுத்தார் ஷபீர் .
மிர்னாவுக்கு கர்ப்ப வயிற்றுக்கு டம்மி ஒன்றும் நிஜமான ஒன்பது மாத குழந்தை எடையில் ,ஒரு செட்டப்பும் தயார் செய்தோம் . மிர்னா டம்மி வேண்டாம் என்று சொல்லிவிட்டு நிஜ எடை உள்ள செட்டப்பையே அணிந்து நடித்தார் . அதை நிஜமான குழந்தையாகவே பாவித்தார்.
ஒரு நிலையில் தன் வயிற்றைப் பார்த்து குழந்தையிடம் பேசுவது போல பேசவே ஆரம்பித்து விட்டார் .
நாங்கள் இந்தப் படத்தில் சிசேரியன் பிரசவம் , இயற்கைப் பிரசவம் எது நல்லது என்பது பற்றி எல்லாம் பேசவில்லை. இயற்கை பிரசவத்துக்கு முயலும் ஒரு தம்பதியின் கதையைத்தான் பேசி இருக்கிறோம் .
படம் பிப்ரவரி 23 அன்று தென்னிந்திய மொழிகளில் வெளிவருகிறது ” என்றனர்.