பூமர் அங்கிள் @ விமர்சனம்

அன்கா மீடியா தயாரிப்பில் யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம் எஸ் பாஸ்கர், மறைந்த சேஷு, பாலா, தங்கதுரை, சோனா, மதன் பாபு நடிப்பில் தில்லையின் எழுத்தில் ஸ்வாதேஷ் இயக்கி இருக்கும் படம். 

கிராமம் ஒன்றில் பலான படம் பார்த்த குற்றத்துக்காக நான்கு சிறுவர்கள் தண்டிக்கப்பட, ஒருவன் மட்டும் ஊரை விட்டுத் தப்பி வளர்ந்து ( யோகி பாபு)   ஒரு ரஷ்யப் பெண்ணை மனது கொள்கிறான் .

அது போதாது என்று அவன்  ஆண்மை பெருக்கும் மருந்து என்று அனுப்பிய மருந்தை சாப்பிட்டு ஒரு நண்பனுக்கு (பாலா ) திக்குவாய், ஒரு நண்பனுக்கு  ( தங்கதுரை) காது கேளாமை, ஒருவனுக்கு (சேஷு) முதுமைத் தோற்றம் என்று பாதிப்பு ஏற்பட நாலாவது மாத்திரையை சாப்பிட்ட ஊரு நாட்டமைக்கு ( ரோபோ சங்கர்) ஆண்மைக் குறைவு என்று பிரச்சனைகள் ஏற்பட, நால்வரும் அந்த நண்பன் ஊருக்கு மீண்டும்  வந்தால் பழி வாங்கக் காத்து இருக்கிறார்கள். 

இந்த நிலையில் ரஷ்யாக்காரியிடம் இருந்து  கணவன் விவாகரத்துக் கேட்கிறான் . அவளோ , ” என்னை உன் ஊருக்கு அழைத்துப்,போய், உன் அப்பாவான விஞ்ஞானி (மதன்பாப்) இருந்த அரண்மனையில் சில நாட்கள் தங்க வை . அப்புறம் விவாகரத்து தருகிறேன் ” என்கிறாள் . 

வேறு  வழியின்றி அவன் மனைவியோடு  ஊருக்கு வர, நண்பர்கள் அவனை பழி வாங்க முயல ,  விஞ்ஞானியான  அப்பாவின் சக்தி மான் போன்ற ஒரு கண்டுபிடிப்பு ரகசியத்தை திருடவே ரஷ்யாக்கரி வந்திருக்கிறாள் என்பது கணவனுக்குத் தெரிய வர, ரஷ்யாக்காரி உருவாக்கிய ஹோலோகிராம் உருவமான நடிகை ஓவியா அந்தக் கணவனை மயக்க,  அதற்குள்  ரஷ்யாக்காரி நாட்டமை உடம்புக்குள் ஹல்க் போன்ற அந்த சக்தியை உருவாக்க , போட்டியாக மறுதரப்பு உருவாக்கும் சக்திமான், சூப்பர் மேன், ஸ்பைடர் மென் சக்திகள் ஹல்க்கிடம் அடி வாங்க , நடந்தது என்ன என்பதே படம்.

ஹல்க், ஹோலோ கிராம், சக்தி மான், ஸ்பைடர் மேன்,சூப்பர் மேன் என்று யோசித்து ஒரு கதை பண்ண முயன்று இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை? படமாக்கல்? 

குழந்தைகளைக் கவர சில விஷயங்கள், காமெடிக்கு நிறைய காமெடி நடிகர்கள் , கிளாமருக்கு ஓவியா  மற்றும் இடுப்புக் கீழே துணி போட்டால் தடிப்பு அரிப்பு நோய் வருமோ என்று யோசிக்க வைக்கும் சில குட்டைக் கால்சட்டை குண்டு மல்லிகள் ஆகியோர் இருந்தும் .. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் … 

”தண்ணீர் தவிச்சா  கண்ணீர் விட்டுக் குடிச்சுக்கோ”   கதையாக ஆர்ட் டைரக்ஷன் என்ற பெயரில் போராடி இருக்கிறார் பி ஏ ஆனந்த் 

பபூன் வேடத்தில் கவர்கிறார் மறைந்த சேஷு . ரஷ்யாக்காரியாக நடித்த நடிகையை பெரும்பாலான காட்சிகளில் தண்ணி தெளித்து விட்டு விட்டதால் அவர் பாட்டுக்கு குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டு இருக்கிறார் . 

மற்ற காமெடி நடிகர்கள் அனைவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . எப்போதாவது சிரிப்பு,  “வாம்மா மின்னல்….” கதையாக  வந்து போகிறது.

உண்மையில் யோகி பாபுவை  வாய் பேச முடியாதவராக நடிக்க வைத்து ஒரு வார்த்தை… எஸ் .. ஒரு வார்த்தை கூடப் பேச விடாமல் எந்த ஒரு டைரக்டர் நடிக்க வைக்கிறாரோ அவருக்கு கோவில் கட்டலாம்  . அந்த அளவுக்கு  பேசிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருக்கிறார்  யோகிபாபு 

அவர் போலவே தங்கதுரை எல்லாம் தொண்டை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் . 

பூமர் அங்கிள் .. வெறும் பேச்சு வீராசாமி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *