கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதல் முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான படமாக கேப்சர் படத்தை தயாரிக்கிறார்
உலக அளவில் ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படங்களில் ஒன்று இது. நாவல்களை படமாக்குவதற்காக பெயர் பெற்ற இயக்குனர் லோஹித்.ஹெச் இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
ஷாமிகா என்டர்பிரைசஸ் நிறுவனமும் ராதிகா குமாரசுவாமியின் நிறுவனம்தான். முன்னரே ஷாமிகா அவரது மகள்

இந்தப் படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்காக சுற்றிலும் பல சிசிடிவி கேமராக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் பிரியங்கா உபேந்திரா, முகம் முழுவதும் ரத்தத் தீற்றல்களுடன் புன்னகையோடு காணப்படும் ஒரு புதிய போஸ்டர்.. அதில் ஒரு கேமராவின் மீது ஒரு காகம் அமர்ந்திருக்கும் வகையில் வெளியாகி உள்ளது
ஷிவாண்ணாவின் ‘டகரு’ படத்தின் மூலம் (தீபாவளிக்கு தமிழில் வெளியாகி விபரீதம் தெரியாமல் படம் பார்க்கப் போகிறவர்களைக் கதற விடும் ரெய்டு படம் , இந்த டகரு படத்தின் ரீமேக்தான். ஆனால் டகரு வெற்றிப் படம் ) புகழ்பெற்ற மன்விதா காமத் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்துள்ளார். மாஸ்டர் கிருஷ்ணராஜ் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகிறார். பாண்டிக்குமார் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார்.