சிசிஎல் சென்னை ரைனோஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்யாவின் ‘அறிவான’ பேச்சு

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது*. 
 
இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும்,  சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 
 
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். 
 
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு,  மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.  சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா இருக்கிறார்.  கங்கா பிரசாத் நிறுவனராக உள்ளார்.   சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே.சத்யா, தாசரதி, ஷரவ் ஆகியோர் உட்பட பலமுக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
 
23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல்  போட்டி 17 மார்ச் 2024 வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
 
சென்னை ரைனோஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 25 பிப்ரவரி அன்று ஷார்ஜாவில் எதிர்கொள்கிறது. தென்னிந்தியாவில் Star Network ஒவ்வொரு மொழிகளிலும் தனித்தனியாக போட்டியை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. தமிழில் விஜய் சூப்பர் சேனலில் போட்டிகள் தொடர்ந்து ஒளிப்பரப்ப படவுள்ளது. DD Sports மற்றும் ஜியோ சினிமாஸ் 20 போட்டிகளையும் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  
 
இதுகுறித்து விளக்குவதற்காக சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி மற்றும் சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் 
 
இந்நிகழ்வினில்  விஷ்ணு இந்துரி பேசியபோது, “சிசிஎல்-ல் மற்ற எந்த அணியை கேட்டாலும், சென்னை தான் எங்களுக்கு பிடித்த அணி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்த அணியின் மீது அனைவருக்கும் அதிகமான அன்பு இருக்கிறது.  ஐபிஎல்லிற்க்கு பிறகு சிசிஎல்தான் அதிகம் பிரபலமான, அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டி.
 
ஏனென்றால் நிறைய Brodcast Channel-கள் இப்போட்டியை ஒளிபரப்புவதில் ஒன்றிணைந்துள்ளன.  இந்த ஆண்டு, இந்த விளையாட்டு மேலும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. விளையாட வரும் அனைத்து நடிகர்களும் பணத்திற்காக இல்லாமல் பெரும்  ஆர்வத்தினால் விருப்பத்தினால் மட்டுமே வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்”என்றார்.   
 
நடிகர் ஆர்யா  பேசியபோது, “சிசிஎல்  போன்ற ஒரு போட்டியை ஒருங்கிணைத்து நடத்துவது சாதாரண விஷயம்  கிடையாது. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஆர்வம் குறையாமல் அதை நடத்தி வருகிறார் விஷ்ணு. அனைத்து நடிகர்களையும்  ஒருங்கிணைந்து, அதை புத்துணர்ச்சியோடு நடத்தி வருகிறார். எங்கள் அணியை பொறுத்தவரை அனைவரும் நட்போடு இணைந்து  விளையாடுகிறோம். நாங்கள் விளையாட்டின்போது சினிமாவை ஒதுக்கி வைத்து, முழுமூச்சாக விளையாட்டை மட்டுமே நோக்கமாக கொண்டு விளையாடுகிறோம்.
 
ஒவ்வொரு வருடமும் விளையாட்டு முடிந்து, நாங்கள் எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பினாலும், அடுத்த வருடம் விளையாட்டு துவங்கும் போது, விட்ட இடத்தில் இருந்து தொடருவோம் மிகவும் உற்சாகம் ஆகிவிடுவோம். இதுதான் இதன் சிறப்பம்சமே…  இது ஒரு ஆரோக்கியமான, அதே நேரத்தில் மகிழ்ச்சி நிறைந்த விளையாட்டு. இதில் பங்குகொள்வது மகிழ்ச்சி.”என்றார். 
 
நடிகர் பரத் பேசியபோது, “சிசிஎல் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தாலும், தொடர்ந்து  இயங்கி கொண்டே வருகிறது, அதற்கு விஷ்ணுவிற்குதான் நன்றி கூற வேண்டும். இந்த வருடம் விளையாட்டு இன்னும் பிரம்மாண்டமாகி இருக்கிறது. சிசிஎல் என்பது, அனைத்து மொழி நடிகர்களையும் சந்தித்து நட்புடன் பழகுவதற்கான ஒரு வாய்ப்பு. நட்போடு இருந்தாலும், இந்த  வருடம் கப் எடுப்பதில், நாங்கள் உறுதியோடு இருக்கிறோம். கண்டிப்பாக வெல்வோம்.”என்றார் 
 
நடிகர் சாந்தனு பேசியபோது, “சென்னை ரைனோஸில் விளையாடுவது வெற்றி, தோல்வியை கடந்து ஒரு மகிழ்ச்சியை பேரின்பத்தை கொடுக்கிறது. மீண்டும்  நண்பர்களுடன் இணைந்து பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. விஷ்ணு, ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதற்காக அவருக்கு நன்றி.  இந்த முறை கப் எடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறோம். எங்கள் உடன் இணைந்து பயணிக்கும் எங்கள் குழுவிற்கு நன்றி.”என்றார் . 
 
சென்னையில் ஏன் போட்டிகள் இல்லை என்று கேட்டபோது, ” ஹைதராபாத் போன்ற கிரவுண்டுகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை . அங்கே சச்சின் போன்ற கிரிக்கெட் சாதனையாளர்கள் விளையாடி இருக்கிறார்கள் . அதுதான் ஹைதராபாத்தில் மேட்ச்கள் இருக்கு, சென்னையில் இல்லை” என்றார் . 
 
அடடா …. ஆர்யாவின்  அறிவே அறிவு 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *