ஸ்ரீ கிரின் புரோடக்சன்ஸ் சார்பாக எம்.எஸ்.சரவணன் வழங்க இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஒடிக் கொண்டிருக்கும் படம் “சண்டி வீரன்”.
இந்தப் படத்துக்கு சண்டி வீரன் படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரணம் ?
சிங்கப்பூர் காவல் துறையால் நிறைவேற்றப்படும் ரோத்தா என்ற தண்டனை பற்றி சண்டி வீரன் படத்தில் வரும் காட்சிதான்?
ரோத்தா என்றால்?
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குப் போய் விசா காலத்தையும் தாண்டி திருட்டுத்தனமாகத் தங்குவது உள்ளிட்ட சில குற்றங்களைச் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால் , அப்படி சிக்குபவர்களின் கை கால்களைக் கட்டி குனிய வைத்து , ‘பின் புற’த்தில் வலிமையான குச்சியால் அடி பின்னுவார்கள் .
அடிக்கும் அடிகளுக்கு எண்ணிக்கைக் கணக்கும் உண்டு . குறைந்தது மூன்று அடி . குற்றத்தைப் பொறுத்து எண்ணிக்கை அதிகம் ஆகும் . ஆனால் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு ஜென்மத்துக்கும் வலிக்கும் என்கிறார்கள்.
படத்தில் ஹீரோவான அதர்வா சிங்கப்பூர் ஜெயிலில் ரோத்தா வாங்கும் காட்சி இடம் பெறுகிறது . தவிர படத்தின் பல காட்சிகளில் அதை வைத்து நாயகனை நாயகி கிண்டல் செய்யும் காட்சிகளும் “ரோத்தா வாங்கின ஆம்பளைகளுக்கு குழந்தையே பொறக்காதாமே ?’ என்ற கலாய்ப்பு வசனமும் இடம் பெறுகிறது .
இந்த நிலையில் சிங்கப்பூரில் வெளியிடுவதற்காக சண்டி வீரன் படம் அனுப்பப்பட்டது . படத்தைப் பார்த்த சிங்கப்பூர் தணிக்கை குழு சிங்கப்பூர் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் தண்டனையான “ரோத்தா” படத்தில் காண்பிக்கபடுவதால் அந்தப் படத்தை சிங்கப்பூரில் திரையிட தடை செய்து விட்டது .
நடக்கறதைத்தானே காட்டினாங்க ? தப்பா?