அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்க, பிரபுதேவா, நிக்கி கல்ராணி, இளையதிலகம் பிரபு நடிப்பில்
ஷக்தி சிதம்பரம் இயக்கி இருக்கும் படம் சார்லி சாப்ளின் 2. (இதே நிறுவனம் இதே நாயகன் இதே இயக்குனர்தான் ,
சார்லி சாப்ளின் முதல் பாதியை உருவாக்கி இருந்தார்கள்)
திருமண தகவல் நிலையத்தில் வேலை செய்யும் இளைஞன் திரு (பிரபுதேவா). நல்ல நண்பன் ஒருவன் (அரவிந்த் ஆகாஷ்)
ஒரு தலையாக காதலிக்கும் ஒரு தோழி .
திருவுக்கு சாரா என்ற ( நிக்கி கல்ராணி) ஓர் அழகான பெண் மீது காதல் வருகிறது . அவளது தந்தையும் (பிரபு) இதை ஏற்கிறார்
ஆனால் திருவின் இன்னொரு நண்பனான துபாய் ராஜா (விவேக் பிரசன்னா), சாரா ஒரு இளைஞனோடு (பாஷா நாசர்)
கடல் நீரில் இருப்பது போன்ற காட்சியை வாட்ஸ் அப்பில் காட்டி, அவள் கெட்டவள் என்கிறான் .
அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் , திரு அதை நம்பி சாராவை கேவலமாக திட்டி வாட்ஸ் அப்பில் மீடியா மெசேஜ் அனுப்பி விடுகிறான் .
அப்போதுதான் தெரிகிறது , அந்த வீடியோ கடலில் விழுந்த இளைஞனை சாரா காப்பாற்றும் போது எடுத்தது என்று .
பதறிப் போகும் திரு , அந்த வீடியோவை சாரா பார்ப்பதற்குள் அழித்து விட முடிவு செய்து செயல்படுகிறான் .
இந்த முயற்சியில் சைக்கியாட்ரிஸ்ட் சாரா என்ற ஓர் அழகி (ஆதா சர்மா) , புல்லட் புஷ்பராஜ் (ரவிமரியா) மற்றும்
கல்யாணம் நடக்கும் திருப்பதி நகரை சேர்ந்த ஒரு திருட்டு செல்போன் கடைஓனர் சமீர் கோச்சார்) , தடா காடுகளில் உள்ள ஒரு ரவுடி ( தேவ்கில்)
கெட்ட நண்பன், நல்ல நண்பன், ஒரு தலைக் காதல் தோழி எல்ல்ல்லல்லோரும் குறுக்கிடும் போது என்ன நடக்கிறது என்பதே இந்த சார்லி சாப்ளின் 2.
மிக இலகுவான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் சக்தி சிதம்பரம். காமெடி கவர்ச்சி கலர்புல் , ஆக்ஷன் என்ற கலவை என்பது அவர் திட்டமாக இருந்திருக்கிறது .
முகத்தில் வயது தெரிந்தாலும் அசைவுகளில் இன்னும் அதே ஊர்வசி…. ஊர்வசி…. கால பிரபுதேவா . நடிப்பில் வழக்கம் போல சிறப்பு
நிக்கி கல்ராணி இளமை கவர்ச்சி என்று தன் பங்கை சரியாக செய்கிறார் .
பிரபு பொருத்தம் .
படத்தின் முக்கிய அடையாளமான சின்ன மச்சான் பாடலில் ஒட்டு மொத்த யூனிட்டே அசத்தி இருக்கிறது .
எனினும் நிக்கியும் இசை அமைப்பாளர் அம்ரேஷும் ஒரு படி மேலே.
அந்த பாட்டை அம்ரேஷ் ஹிட் ஆக்கியது சாதனை இல்லை . ஏனென்றால் அது முன்பே
செந்தில் கணேஷ்- ராஜ லட்சுமி கலை இணையரின் திறமையால் உலகம் கொண்டாடிய பாடல் .
ஆனால் மற்ற பாடல்களிலும் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் . சூப்பர் .
இவள இவள பாடலுக்கு அம்ரேஷின் வித்தியாச குரல் மகுடம் சேர்க்கிறது .
ஐ வான்ட் டு மேரி யூ மாமா பாடலில் மூன்றாவது பி ஜி எம்மில் அவர் கொடுத்து இருக்கும் டெம்போ மிக்க சேஞ்ச் ஓவர் அபாரம் .
(இதற்கு முன் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் பாடலில் ராஜா செய்த ரசவாதம் அது . ) வாழ்த்துகள் அம்ரேஷ் .
மாமு மாமு , ஜிங்கா புங்கா பாடல்களிலும் சிறப்பாக பங்காற்றி இருக்கிறார் அம்ரேஷ் .
ஒரு பாடல் முடிந்து வரும் அடுத்த காட்சியில் அந்த பாடலின் மெட்டை ரீரிக்கார்டிங்கில் பயன்படுத்திய விதமும் அபாரம் .
கொஞ்சம் அசந்தாலும் அதுவே போர் அடிக்கிற விசயமாகி விடும். . ஆனால் சிறப்பாக செய்து பேக் கிரவுண்ட் ஸ்கோரிலும் ஸ்கோர் செய்கிறார் .
இந்தப் படத்துக்கு பெரும் பலமாக இருப்பது அம்ரேஷ் . சபாஷ் அம்ரேஷ் !
சவுந்திர ராஜனின் ஒளிப்பதிவு படத்துக்கு தரக் கூட்டல் செய்கிறது
தயாரிப்பாளர் சிவா – செந்தி கதபாத்திரங்களின் செயல்பாடுகள் கலகல .
”திருவேலங்காட்டில் இருந்து திருப்பதி வரை சிக்னலே கிடைக்காது ”
“கடலில் விழுந்த இளைஞனை வாயில் கிஸ் அடித்துதான் காப்பாற்ற வேண்டும் “
— போன்ற உட்டாலக்கடி வேலைகளை தவிர்த்து இருக்கலாம் .
பெண்ணின் அழகை வைத்து (கோழி சோடா சீதா) கிண்டல் செய்யும் காட்சிகளையும் தவிர்த்து இருக்கலாம் .