அசியாசின் மீடியா சார்பில் மதியழகன் முனியாண்டி தயாரிக்க, வரலக்ஷ்மி சரத் குமார், சூப்பர் சுப்பராயன், பால சரவணன், சோனா , யமுனா நடிப்பில் வீரக்குமார் இயக்கி உள்ள படம் சேசிங் .
தமிழகத்தில் இருந்தும் மலேசியா வரை நீளும் சமூக விரோதிகள்மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களின் நெட் வொர்க்கை பிடிக்க,
உயர் போலீஸ் அதிகாரியின் ஒத்துழைப்போடு, மலேசியா வரை செல்கிறார்கள் பெண் போலீஸ் அதிகாரி ( வரலக்ஷ்மி) ஒருவரும் அவரது அணியும்( பல சரவணன் , யமுனா , மற்றும் இருவர்)
போன இடத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்ல ஆரம்பிக்கிறார் .
சென்னை உயர் அதிகாரி அதைக் கண்டித்து பணியில் இருந்து விடுவித்து திரும்பி வரச் சொல்லியும் கேளாமல் தொடர்ந்து குற்றவாளிகளைக் கொல்லும் வகையில் செயல்படுகிறார் . ஏன்? எதற்கு? என்ன ஆச்சு ? என்பதே சேசிங் .
இன்னொரு தடவை மேலே உள்ள பத்திகளை படித்தால் உங்களுக்கே புரிந்து விடுகிற கதைதான்.
வரலக்ஷ்மி பெண் போலீஸ் அதிகாரியாக வேகமாகப் பேசி, முறைத்துக் கொண்டு நடிக்கிறார் .
வில்லன்களாக வரும் சூப்பர் சுப்பராயன் , அந்த மலேசிய வில்லன் இருவருமே சிறப்பு.
படம் வண்ண மயமாக இருக்கிறது. மலேசியாவின் அழகான லோக்கேஷன்களை இது வரை யாரும் காட்டாத அளவுக்கு ட்ரோன் ஷாட்களில் காட்டி அசத்துகிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசுவாமி.
தெரிந்த கதைதான் என்றாலும் பரபரப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் வீரக்குமார் .
பால சரவணன் சமய சந்தர்ப்பம் இல்லாமல் ஏதோ பேசுகிறார் . அதைக் காமெடி என்று நம்பி இருக்கிறார்கள்.
இன்னும் நல்ல கதை, சிறப்பான திரைக்கதை, பொருத்தமான வசனங்கள் இருந்திருக்கலாம் இருந்திருக்கலாம் .