சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, கடந்த பத்து வருடங்களாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வரும் “சென்னையில் திருவையாறு” இசை விழா,
11 வது ஆண்டாக, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்குகிறது.
திருவையாறு தியாகராஜரின் பீடத்தில் வருடந்தோறும் இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி, அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடுவது போல
டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 2.50 மணிக்கு “பத்மபூஷண்” பி.எஸ். நாராயணசாமி” தலைமையில் ஒரே மேடையில் 500 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர்.
சரியாக மாலை 5.00 மணிக்கு துவக்க விழாவினை நடிகர் இயக்குனர் பிரபுதேவா கலந்து துவக்கி வைக்கின்றார்.
வயலின் மேஸ்ட்ரோ இசைமாமேதை பத்மஸ்ரீ அ.கன்னியாகுமரி அவர்களின் வாழ்நாள் இசைச்சேவையை பாராட்டும் முகமாக ”இசை ஆழ்வார்” பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கப் படுகிறது
பாரதரத்னா ”எம்.எஸ்.சுப்புலட்சுமி” யின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக நூறு கலைஞர்கள் பங்கேற்கும் கர்நாடிக் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது
நிகழ்ச்சிகள் இவ்வாண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.
www.lakshmansruthi.com, இணைய தளம் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு காமராஜர் அரங்கத்தை ஒட்டியிருக்கும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காங்கிரஸ் மைதானத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரசிகர்களின் வசதிக்காக தினமும் இரவு 7.30 மணி காட்சி நிறைவுற்றதும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வசதியாக சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காமராஜர் அரங்கத்திலிருந்து இலவசமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன..
சென்னையில் திருவையாறு 10 ஆம் ஆண்டு இசை விழாவினை துவக்கிவைத்து பெருமை சேர்த்த பாரத ரத்னா“ஏ.பி.ஜே.அப்துல் கலாம்” அவர்களின் அசல் திருவுருவ மெழுகுச்சிலை லண்டன் வேக்ஸ் மியூசியத்தில் உள்ளது போல், காமராஜர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. திருவுருவச் சிலையுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இசைவிழாவை ஒட்டி நடைபெறும் உணவுத் திருவிழாவை கே.பாக்யராஜ் துவங்கி வைப்பதோடு, 30 அடி உயர, முருங்கைக் காய்களால் வடிவமைக்கப்பட்ட, உலக பிரசித்தி பெற்ற ஈஃபில் கோபுரத்தையும் 18.12.2015 வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்.
(அப்படியே , ‘கண்ணத் தொறக்கணும் சாமி கையப் புடிக்கணும் சாமி’ பாடலை யாராவது வாய்ப்பாட்டு நிகழ்ச்சியில் பாடுவாங்களா, ராம் லக்ஷ்மன்?)
உணவுத்திருவிழாவின் சிறப்பு அம்சமாக வீடுகளில் மாடித்தோட்டம் வடிவமைத்தல், பராமரித்தல், உபகரணங்கள், விதை, உரம் மற்றும் அனைத்து விவரங்களையும் இத்துறையில் சிறந்த வல்லுநர்கள் செய்முறை விளக்கம் அளிக்க உள்ளார்கள்.
மூலிகை செடிகள் வளர்ப்பதற்கான சிறப்பு விளக்கங்களும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைசிறந்த சமையல்கலை வல்லுநர்களின் அனுபவங்கள், பிரபல சமையல் கலைஞர்கள் மற்றும் உணவுக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் செயல் விளக்க நிகழ்ச்சிகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவுகள், நாள் முழுக்க நடக்கும்
சிறுவர்களைக் கவரும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் வித்தியாசமான கலைப்படைப்புகளையும், சிற்பங்களையும் செதுக்கும் அரங்குகள், நிபுணர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் என்று பல ஏற்பாடுகள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்தது போல,சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து தினந்தோறும் 500 மூத்த குடிமக்கள் தனி பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனம், உபன்யாசம், பக்தி பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதியவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு திரும்புகின்ற பொழுது அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காபி வழங்குவதுடன் அத்தியாவசியப் பொருட்கள், ஆன்மிக புத்தகங்களின் குறிப்பேடுகள், முதலுதவி உபகரணங்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்துண்டு, குளிருக்கான ஆடைகள், பேனா,தொலைபேசிக் குறிப்புப் புத்தகங்கள் ஆகியன அடங்கிய விசேஷ கைப்பை ஒன்றும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, இந்த ஆண்டு லஷ்மன் ஸ்ருதியின் ’சென்னையில் திருவையாறு’ குழுவினரும் ”ரோட்டரி இண்டர்நேஷனல் 3230” (ROTARY INTERNATIONAL 3230) அமைப்பும் இணைந்து வெள்ள நிவாரண நிதி திரட்டுகிறார்கள்
டிசம்பர் 15 முதல் 25 வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை காமராஜர் அரங்க வளாகத்தின் ஒரு பகுதியில் பொதுமக்களிடம் இருந்து நிதி மற்றும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திரட்டப்படுகிறது.
இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஷோபனா தன் பங்காக வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நிதி உதவியை ஆரம்பித்து வைத்தார் .
நிகழ்ச்சி பற்றிய விவரங்களுக்கு
www.chennaiyilthiruvaiyaru.com
https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial
http://www.lakshmansruthi.com/Food-Festival/index.asp
தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ct@lakshmansruthi.com
தொலைபேசியில் தொடர்பு கொள்ள: 044-44412345, 044-428 67778, 9941922322,
9841907711, 88070 44521