திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையில் இருந்து , தேங்கிக் கிடக்கும் திரைப்படங்களை நேரடியாக மக்களிடம் சிடி வடிவில் கொண்டு போக , இயக்குனர் சேரன் ஆரம்பித்த C2H திட்டத்தின்படி வர தயாரித்து இயக்கிய ஜேகே நண்பனின் வாழ்க்கை படம் ஜனவரி பதினைந்தாம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது .
அந்த நேரம் பார்த்து தியேட்டர் உரிமையாளர்கள் சேரனிடம் C2H முறையோடு தியேட்டரிலும் வெளியிடுவது பற்றி ஆலோசனை நடத்த, அதனால் வெளியீடு தள்ளிப் போய், ஜனவரி 30 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவித்தார் .
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற கலைப்புலி எஸ் தாணு தலைமையிலான அணியிடம் சேரன் தனது திட்டத்தை விளக்க, இன்னும் யோசித்து திட்டமிட்டு C2H முறையில் படங்கள் வெளியிடுவது பற்றி விளக்க, C2H துவக்க விழாவை அவசரப்பட்டு சிறிய அளவில் செய்து விட வேண்டாம் . பெரிய அளவில் செய்யலாம் என்று கூறினாராம் தாணு .
விளைவாக பிற்பாடு பிரம்மாண்டமான முறையில் C2H முறையில் படங்களை வெளியிடும் நாள் பற்றி விரைவில் அறிவிப்பாராம் சேரன்