சேரனின் ‘திருமணம்’

மீண்டு(ம்) வருகிறார் இயக்குனர் சேரன் . 
 
அன்று காதலின் ஆட்டோகிராப் தந்தவர் இன்று ‘திருமணம்’ ( என்ற படத்தை) தருகிறார் –  ‘சில திருத்தங்களுடன்’ என்ற துணைத் தலைப்போடு  ! 
 
சுயமான திருத்தம்தானே வெற்றிகரமான வாழ்க்கைக்கு பொருத்தம்  . 

PRENISS INTERNATIONAL (OPC) PRIVATE LIMITED சார்பில் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார் . ” சேரன் போன்ற நல்ல இயக்குனர்கள் சும்மா இருப்பதில்

எனக்கு உடன்பாடு இல்லை . எனவே நானே அவரை சந்தித்து பேசி படம் கொடுத்தேன்.”– என்கிறார் இந்த உயர்ந்த மனிதர் – மற்றும்  கலை ரசிகர் . 

அதுவும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சேரன் , ” இந்தப் படத்தை தயாரித்தது மட்டுமல்ல ..
 
எனது முந்தைய பொருளாதாரப் பிரச்னைகள் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைத்து விட்டு , நீங்கள்  எந்த குழப்பமும் இல்லாமல் படம் எடுங்கள்
 
என்று பிரேம்நாத் சிதம்பரம் சார் சொன்னார் ” என்று நெகிழ்வோடு கண் கலங்கி  சொல்லி விட்டு ,
 

பிரேம்நாத் சிதம்பரத்தை பார்த்து வணங்கியபோதுதான் , இருவரின் பண்பின் உயரமும் புரிந்தது 

 
தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறீர்கள்  பிரேம்நாத் சிதம்பரம் சார் . நன்றியும் வாழ்த்துகளும் 
 
இந்த சிறந்த தயாரிப்பாளரையும் சேரனையும் சேர்த்து வைத்தவர் சினிமாவில் நீண்ட அனுபவம் பெற்ற, 
 
வெள்ளை சேது . PRENISS INTERNATIONAL (OPC) PRIVATE LIMITED நிறுவனத்தின் CEO 
 
நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள் சார் . உங்களுக்கு மனமார்ந்த நன்றி . இது போல
 
இன்னும் பல நற்பணிகள் நீங்கள் செய்ய வேண்டி இருக்கிறது . அதற்காக வணக்கங்கள் . வாழ்த்துகள் . 
 
இன்று காலம் மறந்து விட்ட கலைப் பூர்வமான அழகிய வண்ணங்கள் மற்றும் கலை வடிவங்களுடன் கூடிய திருமண பத்திரிக்கை உள்ளிட்ட
 
பல கவின்மிகு விஷயங்கள் விரிந்த –  திருமணம் படம் பற்றிய காட்சித் தொகுப்பு கண்களையும் மனசையும் கட்டிப்பிடித்து கானம் பாடிக் காதலிக்க வைத்தது . 
 
அருமை.சிறப்பு  நேர்த்தி .விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சேரனை வாழ்த்தினார் 
 
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தம்பி ராமையா உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்
 
சேரனின் மறு வரவையும் தயாரிப்பாளர்களின் அன்பான குணத்தையும் பாராட்டிப் பேசினார்கள் ” எனக்கு மட்டும் அல்லாமல் என் மகனும்
வளர்ந்து வரும் நடிகனுமான உமாபதிக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறார் . அதற்காக நன்றி .
 
அவரது படங்கள் சொல்லும் அவரது அவசியத்தை . அவர் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும் ” என்றார் . 
 
சமுத்திரக் கனி வந்திருந்து வாழ்த்தினார் . சேரன் மேல் தனக்கு உள்ள அன்பையும் மரியாதையையும் சொன்னார் .
 
படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவை சீராட்டி … அப்புறம் பாராட்டி பேசினார் . விஜய் சேதுபதியை நின்னு நடிக்கும் நடிகன் என்று பாராட்டினார் 
 
வெள்ளை சேது பேசுகையில் , ” நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பியபோது எனக்கு சேரன் ஞாபகம் வந்தார் .
 
போய் பேசினோம் . நல்ல விஷயங்கள் நடந்தது . படம் நன்றாக வந்துள்ளது . விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கும். விஜய் சேதுபதிக்கு நன்றி  ” என்றார்     
தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் ” இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்தும் விஜய் சேதுபதி சாருக்கு நன்றி . மிகச் சிறந்த நடிகர் அவர் .
 
சேரன் போன்ற நல்ல இயக்குனர்கள் சும்மா இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை . எனவே நானே அவரை சந்தித்து பேசி படம் கொடுத்தேன்.
 
படம் நன்றாக வந்துள்ளது . அனைவர்க்கும் பிடிக்கும் படமாக அமைந்து உள்ளது . தொடர்ந்து நிறைய படங்கள் தயாரிக்கும் திட்ட்டத்தில் இருக்கிறோம்  ” என்றார்  
 
சேரன் தன் பேச்சில் , ” நீண்ட இடைவேளைக்குப் பிறகு .. ஒரு இடைவேளைக்கு பிறகு .. என்ற வார்த்தைகளில் எல்லாம்  எனக்கு உடன்பாடு இல்லை .
 
நான் சினிமாவில் இருந்தேன் . சினிமாவுக்காக C2H  துவங்கினேன் . அதில் பல கஷ்டங்களை பார்த்தேன்.
 
அதே நேரம் அதனால் நிறைய மனிதர்கள் கிடைத்தார்கள் . அவர்களிடம் எல்லாம் பேசினால் எவ்வளவோ கதைகள் . எல்லாவற்றையும் சேமித்தேன் .
 
அடுத்த பத்து வருடத்துக்கான தயாரிப்போடு இப்போது இயங்குகிறேன் . என்னை  இப்படி எழுந்து நடக்க வைத்த
 
தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம், மற்றும் வெள்ளை சேது இருவரையும் என்றும் மறக்க மாட்டேன். 
 
விஜய் சேதுபதியின் அன்பை என்னென்று சொல்வது . எனக்காக இங்கு வந்த அவருக்கு நன்றி . விரைவில் அவரோடு இணைந்து படம் செய்வேன்  “என்றான் . 
 
விஜய் சேதுபதி தனது பேச்சில் , ” சேரன் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி . அவருடைய படங்கள் காலத்தால் மறக்க முடியாத படங்கள் .
 
அவர் மீண்டும் வந்திருப்பது நல்ல விஷயம் . தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள் ” என்றார் 
 
பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த தினம் சேரனின் பிறந்த நாள் என்பதால் அவரது பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது . 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *