சித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்

ட்ரீம்பிரிட்ஜ் புரடக்ஷன்ஸ் சார்பாக எல் வி ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், எஸ் என் எழிலன், யோகேஸ்ராம் ஆகியோர்  தயாரிக்க  விதார்த், அஜ்மல், அசோக் ராதிகா ஆப்தே, காயத்ரி நடிப்பில் , முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கி இருக்கும் படம் சித்திரம் பேசுதடி 2  , பேசுதா ? ஏசுதா ? பேசலாம் .

பணக்கார இளைஞன் விக்கிக்குச்  (அஜ்மல்) சொந்தமான பங்களாவை பறித்துக் கொண்டு கொடுக்க மறுக்கிறான் ஒரு தாதா . அதை மீட்க பணத்துக்காக அலைகிறான் இளைஞன் . அவனுக்கு ஒரு காதலி .(பிரியா பானர்ஜி).

தாதாவை போட்டுத் தள்ள அமர்த்தப்படுகிறான்  கூலிப்படை நபரான திரு (விதார்த்).

தன் காதலனுடன் ரகசிய திருமணம் செய்துகொள்ள திட்ட மிடுகிறாள்  ஓரு பணக்காரரின் மகளான பிரியா (காயத்ரி)
பிரியாவை பார்க்க காதலன் வரும் வழியில் ,  தாதாவை கொல்ல முயல்கிறான் திரு . இந்த முயற்சியில் தாதா உயிர் பிழைக்கிறான் .

இந்த சம்பவ இடத்தில் சாட்சியாகப் போன காரணத்தால் பிரியா  சொன்ன நேரத்துக்கு காதலனால் போக முடியாமல் போகிறது . 
இதற்கிடையில்  பிரியாவின்  பை  ஒரு பிக் பாக்கெட்டால் திருடப்படுகிறது . அதில் பிரியாவின் குடும்ப நகை ஒன்று இருக்கிறது.

தாதாவைக் கொல்ல திருவை அமர்த்திய நபர் , அடியாளான சலீமிடம் ( அசோக்), ”கொலை முயற்சியை பார்த்து விட்ட காதலனை கண்டுபிடித்து கொன்றுவிடு. முடியாது என்றால் திருவைக் கொன்று விடு” என்கிறார். 

காதலனை கண்டு பிடித்துக் கொல்ல சலீம் கிளம்புகிறான் 
பணக்கார இளைஞன் தாதாவிடம் தொலைத்த வீடு விசயத்தில்  ஒரு போலீஸ் உயர் அதிகாரி ( ஆடு களம் நரேன்),

மணி கண்டன் என்ற நபர் ( பஞ்சு சுப்பு) , குழநதையின் அறுவை சிகிச்சைக்கான பணத்துக்கு அலையும் ஒரு பதவி பறிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் , பிரியாவின் அப்பா ஆகியோர் சம்மந்தப்படுகிறார்கள்.

 இதில் மணிகண்டன்தான் தாதாவை கொல்ல திருவை ஏவியது . இவன் தாதாவின் பார்ட்னரும் கூட.

 பிரியாவின் நகைப்பையை பறித்த பிக் பாக்கெட் அதை , விபச்சாரத் தொழில் செய்பவளும் தான் நேசிப்பவளுமான தனலட்சுமிக்கு ( நிவேதிதா) கொடுக்க விரும்புகிறான். 

ஆனால் அந்த விலைமாது திருவை  திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் . திரு மறுக்கிறான் .

தாதாவை அவன் மனைவியே ( ராதிகா ஆப்தே) கொல்ல முயல்கிறாள் .  அவளுக்கு மணிகண்டன் உதவ முன் வருகிறான்  
இதற்கிடையில் அரசியல்வாதி ஒருவன் (அழகம்பெருமாள்)

சிறுமிகளை சூறையாடும் வீடியோ விக்கிக்கு கிடைக்கிறது . அதை வைத்து அரசியல்வாதியிடம் பணம் பறித்து தன் பங்களாவை மீட்க விக்கி திட்டமிடுகிறான் .

காதலன் ஒரு சூழ்நிலையில் பிரியாவின் அப்பாவுக்கு உதவுகிறான். 

காதலனை பிடிக்கப் போன அடியாள் அது முடியாத நிலையில் பிரியாவை கடத்திக் கொண்டு வருகிறான் . அவளுக்கு உதவ தீர்மானிக்கிறான் திரு . 

அரசியல்வாதிக்கு விருந்தாக்க ஓர் இளம்பெண்ணை பக்கத்து பில்டிங்கில் சில ரவுடிகள் கடத்தி வைத்திருக்க , திருவிடம் ” அந்த சிறுமியை  விடுவித்தால்தான் நானும் தப்பித்துப்  போவேன்” என்கிறாள் பிரியா .

 இந்த கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று எதிராகவோ சார்ந்தோ  சுயநலமாகவோ பொது நலத்துடனோ அடுத்தடுத்து செயல்படும்போது என்ன நடக்கிறது?

விக்கிக்கு தன பங்களா கிடைத்ததா இல்லையா ? ஆம் எனில் எப்படி என்பதே இந்த சித்திரம் பேசுதடி 2 

நிறைய கதாபாத்திரங்கள் வெவ்வேறு சூழல்கள் அவை ஒன்றுக் கொன்று உரசும்பொது ஏற்படும் சுவாரஸ்யங்கள் என்ற மேற்கத்திய சினிமா பாணியில் எடுக்கப்பட்ட படம்.

(சுமார் 15 வருடம் முன்பு வந்த ஒரு நார்வே படம் இந்த வகையில் புகழ் பெற்றது . சினிமா காரம் காபி என்ற பெயரில் அதை சென்னை  உலகப் பட விழாவில் கூட திரையிட்டார்கள்  )

நிறைய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு புள்ளியில் ஆரம்பித்து ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்படுவது போன்ற இந்த திரைக்கதை உத்தி  சிரமமான ஒன்று.அதை செய்து இருக்கிறார்  ராஜன் மாதவ் சிறப்பு 

மேக்கிங்கில் கவர்கிறார் 

பத்மதேஷ் ஒளிப்பதிவு சிறப்பு. சாஜன் மாதவ் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . ஒரு பாடலில் கிரிக்கெட் வீரர் பிராவோ தோன்றி ஆடுகிறார் .

 படத்  தொகுப்பாளருக்கு அதிக வேலை தரும் வகையான படம் இது .   கே ஜே வெங்கட் ராமனின் படத் தொகுப்பு சமாளிக்கிறது . சில காட்சிகள் தேவைக்கு மேல் நீள்கின்றன . பாடல்கள் பொருந்தவில்லை 

இது போன்ற திரைக்கதைகளில் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் நிதானமாக அடிப்படை காதாபாத்திரங்கள் மற்றும் சூழல்களை சொல்லி விட்டு அப்புறம்தான் இந்த ஜிக்ஜாக் வேலைகளை துவங்க வேண்டும் .

 ஆனால் இங்கே ஏறுவதற்குள் வண்டியை எடுக்கிறார்கள் . தாவிப் போய் ஏற வேண்டி இருக்கிறது . அந்த பதட்டம் முடிவதற்குள் பயணம் பாதிக்கு மேல் போய் விடுகிறது.

தவிர, முன்னரே சொன்னது போல நிறைய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு புள்ளியில் ஆரம்பித்து ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு வகையில் மற்ற கதாபாத்திரத்தோடு சம்மந்தப்படுவது போன்ற இந்த திரைக்கதை உத்தி  சிரமமான ஒன்றுதான் . அதற்கு பாராட்ட வேண்டும்தான்

ஆனால் அது வியப்பாக மட்டும் ஆவதில் பலன் இல்லை . சுவாரஸ்யமாக,  பொழுது போக்காக , எதிர்பாராததாக யூகிக்க முடியாதவையாக இருக்க வேண்டும் . 

ஆனால் இங்கே அந்த சுவாரஸ்யம்தான்  மிஸ்ஸிங் . 
எப்படி எல்லாம் டுவிஸ்ட் கொடுக்கலாம் பாத்தியா என்ற  டெக்ஸ்ட் புக்  உணர்வு வருகிறதே ஒழிய , அந்த டுவிஸ்டுகள் இயல்பாக அமையவில்லை .

எனினும் சிறப்பான முயற்சி !. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *