கமல்ஹாசனின் வழிகாட்டுதலில் திரைத்துறையினருக்கு பயிற்சி

_MG_1200

திரைத் துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின்  பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35  திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான   உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை.

இதனால் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான திரு.ஜி.சிவாவின் முயற்சிமற்றும்   ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபையின் தலைவர்  கமல்ஹாசனின்  வழிகாட்டுதல்படி, 3 நாள் அடிப்படை பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

_MG_1118

கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ள இதில், திரைத் துறையை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நிபுணர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பயிற்சி பட்டறைக்காக, நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.

_MG_1104

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபை இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ஓர் அங்கமாகும். இதன் மூலம் 2022-ஆம் ஆண்டுக்குள் 11.24 லட்சம் தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ளனர்.

மேலும் இந்த சபை பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் யோஜ்னா திட்டத்தில் பங்கேற்று இந்தியா முழுவதிலும் 5000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →