காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்

அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சி காமிக்ஸ்தான், இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, இப்போது தமிழில் அறிமுகமாகிறது. பெயர் ‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’
 நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது. ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே  இந்த நிகழ்ச்சி
 
இந்த புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், நடுவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாகவும்  இருப்பார்கள்

 
மூவருமே அவரவர்க்கான நகைச்சுவை பாணியில் நிபுணர்களாக இருப்பவர்கள். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர்கள் தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி மேடைகளின் ராஜாவாக அல்லது ராணியாகத் தேர்வாகப் போட்டியிடுவார்கள்.  
 

தமிழ் ஸ்டான்ட் அப் காமெடியில் இது வித்தியாசமானது, விசேஷமானது என நிகழ்ச்சியின் நடுவர்கள் பகிர்ந்துள்ளனர்.

 
கார்த்திக் குமார் பேசுகையில்,”நகைச்சுவைப் பற்றிய ஒரு வெளிப்படையான உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்பதே காமிக்ஸ்தான் இந்தி பதிப்பின் முதல் இரண்டு சீசன்களிலும் முக்கியமான நோக்கமாக இருந்தது.

ரசிகர்கள் ஒரு நகைச்சுவையக் கேட்டு ரசிப்பதை விட அது பற்றி உரையாட முடிந்தது. எனவே அவர்கள் நிபுணர்களானார்கள். என்ன பிடித்தது, எதற்காகப் பிடித்தது என்பதைக் கூறி,
 
போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து, எனக்கு இந்த மாதிரியான நகைச்சுவை பிடித்திருக்கிறது, இந்த நகைச்சுவையாளரப் பிடித்திருக்கிறது என்று தேர்ந்தெடுத்தார்கள்.
 

இது மிக சுவாரசியமான அம்சம் என நான் நினைக்கிறேன். இதைத்தான் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா செய்யப் போகிறது. ஸ்டான்ட் அப் காமெடி என்றால் உண்மையில் என்ன என்று மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும்” என்றார்.

பிரவீன் குமார், “பல்வேறு புதிய திறமைகளை மேடைக்குக் கொண்டு வர, நான் இந்த நிகழ்ச்சிக்காக மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். என்னைப் போன்ற அனுபவமுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு தரும் தளமாக மட்டுமல்லாமல்,
 
நிறைய இளம் திறமைகளையும் அழைக்கிறது. பல்வேறு மாநிலப் பின்னணியில் இருக்கும் திறமைகளையும் இது அடையாளப்படுத்தும்” என்றார் 
காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவமான நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, நகைச்சுவையில் உள்ளூர் பாணியை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியாக தங்கள் திறமைகளைக் காட்டுவார்கள்.
 
சிறந்த ஆறு போட்டியாளர்கள், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா சாம்பியன் பட்டத்துக்காகப் போட்டியிடவுள்ளனர்.  
 
ஒன்லி மச் லவுடர் தயாரிக்கும் காமிக்ஸ்தான் தமிழை, அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஜெய் ஆதித்யா, மெர்வின் ரொஸாரியோ ஆகியோர் எழுதியுள்ளனர்.
 
11 செப்டம்பர் 2020ஆம் தேதி முதல், காமிக்ஸ்தான் தமிழின் அனைத்து பகுதிகளை, அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாகக் கண்டு மகிழுங்கள்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *