
G.V. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படம் விமர்சகர்கள் இடையேயும் , ரசிகர்கள் இடையேயும் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது.
இசை அமைப்பாளராக இருந்த G.V.பிரகாஷ்குமார்க்கு ஒரு நல்ல நடிகன் என்ற அந்தஸ்தும் கிடைத்தது.
படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மீண்டும் தயாரிக்கும் படம் டார்லிங் 2.
இந்தப் படத்தில் மெட்ராஸ் புகழ் கலையரசன், காளி வெங்கட், முனிஷ்காந்த், மெட்ராஸ் புகழ் ஜானி, இவர்களுடன் புதுமுகங்களான ரமீஸ் மற்றும் மாயா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.
அறிமுக இசையமைப்பாளர் ரதன் மற்றும் அறிமுக ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்தி கண்ணன் இவர்களோடு சதீஷ் சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில்தான் இந்த கதை உருவாக்கபட்டது என்கிறார் இயக்குனர். அவரும் அவரது நண்பர்களும் ஒரு சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட அனுபவம்தான் இந்த படத்தின் கதையாம்.
”சின்ன பட்ஜெட்லதான் இந்த படத்தை ஆரம்பித்தோம். ஆனால் ஞான வேல் ராஜ சாரின் கை பட்டதும் இது பெரிய படம் ஆகிப் போனது
படத்தில் நடித்த அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தனர் படம் முழுக்க இரவு நேரத்தில் அதுவும் ஊட்டிக் குளிரில் படம் எடுத்தோம், குளிரில் நடுங்க நடுங்க படமாக்கப் பட்ட இந்தப் படம்,
இந்த வெயில் காலத்தில் ரசிகர்களை பேய் பயத்துடன் நடுங்கிi நடுங்கி பார்க்க வைக்கும் படமாக இருக்கும் ,” என்கிறார் இயக்குனர்
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது டார்லிங் 2