பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரிக்க,
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் ஹீரோவாகவும், புதுமுகம் அய்ரா அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்க
அறிமுக இயக்குநரான கண்ணன் ரங்கசாமி இயக்கியிருக்கும் படம் தாயம்
ஒளிப்பதிவு – பாஜி, இசை – சதீஷ் செல்வம்(அறிமுகம்), படத் தொகுப்பாளர் – சுதர்சன், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – முத்தமிழ், அருண்ராஜா காமராஜ்.
பாடகர்கள் – எம்.சி.ஜாஸ், சக்திஸ்ரீ கோபாலன், நிக்கித்தா காந்தி, அல்போனேஸ் ஜோசப், ஒலிப்பதிவு – கார்த்திக்.
இந்திய சினிமாவில் முதல் முறையாக, ஒரு ஒரே அறையில் படமாக்கப்பட்டிருக்கும்முழு நீளப் படம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் இது ஒரு ஹாரர் – சஸ்பென்ஸ் – திரில்லர் திரைப்படமாம்.
காஸ்மோ வில்லேஜ் சிவாகுமார் வெளியிட இருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் கண்ணன் ரங்கசாமி
“ஒரு நேர்காணலுக்காக வரும் எட்டு இளைஞர்கள் ஒரு தனி அறையில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் அப்படி என்ன நேர்காணலுக்கு சென்றார்கள், அது எப்படி முடிவடைகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.
ஒரே ஒரு அறையிலேயே ஒட்டு மொத்த படமும் படமாக்கப்பட்டிருந்தாலும், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை காட்சிக்கு காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகும்.
ஒரு சிறந்த ஹாரர் படத்திற்கு வலுவான தூணாக அமைவது பின்னணி இசைதான். எனவே, படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும்
பிரத்தியேகமாக கிரீஸ் – மாசிடோனியா நாட்டின் புகழ் பெற்ற F.A.M.E.S ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் செய்திருக்கிறோம்.
இந்தப் படத்துக்காக ஒரு வித்தியாசமான் மாஸ்க் உருவாக்கி உள்ளோம் . படத்தின் மிக முக்கியமான மிரட்டலான விஷயம் அது ” என்றார்
“முழுக்க, முழுக்க வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகியிருக்கும் எங்களின் ‘தாயம்’ திரைப்படமானது, நிச்சயமாக மற்ற எல்லா திகில் படங்களில் இருந்தும்
தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது…” என்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.எஸ்.சுந்தர்