கார்த்திக் நரேன், நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடைன்மெண்ட்., மற்றும் வீனஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் கணேஷ் ஆகியோர் தயாரிக்க .
ரகுமான், அஸ்வின், பிரகாஷ் , டெல்லி கணேஷ் , சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா, பாலாஹாசன், வினோத்வர்மா, ஷரத்குமார்மற்றும்பலர். நடிப்பில்
அறிமுக இயக்குனர் கார்த்திக்நரேன் எழுதி இயக்கி இருக்கும் படம் துருவங்கள் பதினாறு
ட்ரீம்பேக்டரி நிறுவனம் வெளியிடும் இந்தப் படம் வரும் முப்பதாம் தேதி வெளிவருகிறது
கதை ?
தீபக் என்னும் காவல்துறை அதிகாரி தனது பணியில் ஒரு வழக்கை ஆய்வு செய்த பொழுது சந்தித்த விபத்தில், ஒரு காலை இழக்க நேரிடுகிறது.
ஓய்வில் இருக்கும் அவர் ஐந்து வருடங்களுக்குப்பின் அந்த வழக்கை மீண்டும் தூசித்தட்ட நேரிடுகிறது.
அந்த வழக்கில் உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த நாளில் அவரையும் சுற்றி நடக்கும் சம்பவங்களே இந்தப் படம் .
படத்தின் முன்னோட்டம் ஒன்றையும் படம் பார்த்த பிரமுகர்கள் படம் பற்றி தெரிவித்த கருத்துகளையும் திரையிட்டார்கள் .
படமாக்கலில் அசத்தி இருக்கிறார்கள் .
இயக்குனர் சுந்தர் சி, சுகாசினி மணி ரத்னம், நடிகர் சாந்தனு , தயாரிப்பு நிர்வாகி வெங்கட் ஆகியோர் படத்தை கொண்டாடிப் பேசி இருந்தார்கள்
”என்ன முயன்றும் கிளைமாக்சை யூகிக்க முடியவில்லை . அசத்தி இருக்கிறார் இயக்குனர் ” என்கிறார் சுந்தர் சி
“இது போன்ற இயக்குனர்கள் படத்தில் நடிப்பது நடிகர்களுக்கு பெரிய கொடுப்பினை . ரகுமான் மிக சிறப்பாக நடித்துள்ளார் ” என்கிறார் சுகாசினி
“நடிகர்களை சரியாக பயன்படுத்தி அவர்களுக்கு முக்கியதத்துவம் கொடுத்து எடுத்துள்ள விதம் அருமை ” என்கிறார் சாந்தனு
“படத்தை பின்னணி இசை இல்லாமல் பார்த்தால் கூட , அல்லது டயலாக் மற்றும் பின்னணி இசையை மட்டும் (ஒலிச் சித்திரம் போல ) கேட்டால் கூட நமக்கு முழு திருப்தி கிடைக்கும் ” என்கிறார் வெங்கட் .
படத்தின் ஆடியோவை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனது அலுவலகத்தில் வைத்து வெளியிட்டுள்ளார்.
படம் பற்றி உற்சாகமாகப் பேசும் இயக்குனர் கார்த்திக் நரேன் ” படம் ஒரு சைக்கலாஜிகல் கிரைம் திரில்லர் என்றாலும் இது உணர்வுகளின் சங்கமமாகவும் இருக்கும் .
இந்தப் படத்தின் கதையை சொல்ல ரகுமானை பார்த்தபோது என் மேல் அவருக்கு நம்பிக்கை வரவே இல்லை . கதை சொல்லுங்க பார்ப்போம் என்றார்
சொன்ன உடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சந்தோஷாமாக நடித்துக் கொடுத்தார் . படம் முடியும் போது என் சினிமா கேரியரில் நான் நடித்த பெஸ்ட் படம் இதுதான் என்று,
என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னார் ” என்கிறார் .
தவிர இந்தப் படம் சம்மந்தமாக திரைக்கதைப் போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளார் கார்த்திக் நரேன் .
அது என்ன ?
“முன்னும் பின்னும் சம்பவங்களை சொல்லும் படம் இது . படம் பார்க்கும் ரசிகர்கள் படத்தில் இடம்பெறும் காட்சிகளை வரிசைப் படுத்தி சரியாக சொன்னால்,
முதல் மூன்று பேருக்கு மொத்தம் ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் . அதை அவர்கள் knightnostalgia#gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் ” என்கிறார்
படத்தை வாங்கி வெளியிடும் ட்ரீம் ஃபேக்டரி சார்பில் பேசிய சக்தி , படம் மிக வித்தியாசமாக சிறப்பாக இருந்தது .
அதனால்தான் ஞானவேல் ராஜா, சி வி குமார், அபினேஷ் இளங்கோவன், சசிகாந்த் உள்ளிட்ட பெரிய தயாரிப்பாளர்கள் பங்குதாரர்களாக உள்ள டிரீம் பேக்டரி மூலம் வெளியிடுகிறோம் ” என்கிறார்