‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘ இருவர் உள்ளம்’, ‘தொட்டால் தொடரும்’, ஆகிய படங்களைத் தயாரித்துள்ள எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில்,
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாக்கணும் போல இருக்கு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பரதன் ஹீரோவாகவும்,
அன்சிபா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சூரி, கஞ்சா கருப்பு, சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோரது கூட்டணியில் காமெடி காட்சிகள் அமைந்துள்ளன.
அருள்தேவ் இசையில் “குப்பம்மா மகளே…குப்பம்மா மகளே…எப்பம்மா வச்சிக்களாம்…” என்ற பாடலுக்கு மும்பை மாடல் அழகி பூஜா என்பவர் ஆடியிருக்கிறார்.
இதுவரை தயாரிப்பாளராக மட்டுமே சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்த துவார் ஜி.சந்திரசேகர், “பாக்கணும் போல இருக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும் களம் இறங்குகிறார்.
படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ள அவர், தொடர்ந்து படங்களை தயாரிப்பதுடன், நடிக்கவும் இருக்கிறார்
விரைவில் வெளியாக உள்ள ’பாக்கணும் போல இருக்கு’ படத்திற்கு பிறகு தான் தயாரிக்கும் புது படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ள துவார் ஜி.சந்திரசேகர்,
அப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க ஆஸ்திரேலியாவில் லோக்கேஷன்களை தேர்வு செய்துக் கொண்டிருக்கிறார்.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்ற துவர் ஜி.சந்திரசேகர் கடந்த 7 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.