

செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பெட் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர் கடவுள் பாதி மிருகம் பாதி.
பூஜாவும் ஸ்வேதா விஜய் என்ற புதுமுகமும் நாயகிகளாக நடிக்கும் இந்த ப படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பவர் ராஜ். இவர் நடிகை பூஜாவுக்கு கல்லூரித் தோழர். நடிகர் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் குணம் எனப்படும் நல்ல குணங்களும் உண்டு . மிருக குணம் எனப்படும் கெட்ட குணங்களும் உண்டு . நல்ல குணங்களோடு இருக்க விரும்பும் ஒருவனின் மிருக குணங்களை தூண்டி விட்டால் என்ன ஆகும் என்பதன் அடிப்படையில் கதை போகும் இந்தப் படத்தில் , இப்போது ராஜே நடித்திருக்கும் வேடத்தில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் நடிகர் ஆர்யாவாம்.
இது பற்றி பேசும் ராஜ் “அவனை வச்சுதான் பிளான் பண்ணேன் . ஆரம்பத்துல சம்மதம் சொன்னான் . ஆனா கால்ஷீட் தரவே இல்ல. கேட்கும்போதெல்லாம் ‘தரேண்டா மச்சான் தரேண்டா மச்சான்’னு சொல்லிக்கிட்டு இருந்தானே தவிர, ரெண்டு வருஷமா இழுத்தடிச்சான் . பார்த்தேன் .. போடான்னு சொல்லிட்டு நானே நடிச்சுட்டேன். படமும் எடுத்தாச்சு. அவனுக்கு தரவேண்டிய சம்பளமும் மிச்சம் ” என்று படத்தின் ஆடியோ விழாவிலேயே எல்லாவற்றையும் ஒப்பனாகப் போட்டு உடைக்க, அருகில் இருந்த பூஜா ராஜை அதட்டித் தடுத்து பேச்சை மாற்றி மேற்கொண்டு ஆர்யா பற்றி தவறாக எதுவும் பேச விடாமல் செய்தார் .
இருக்காதா பின்னே?