டி.ராஜேந்தர் குழுவில் பணியாற்றி தனது டிரம்ஸ் இசை கலை மூலம் புகழ்பெற்று, ஏ.ஆர்.ரகுமானுடனும், தனியாகவும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தி, உலகிலேயே நம்பர் ஒன் டிரம்ஸ் கலைஞராக விளங்குவதோடு அரிமா நம்பி படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் ஆன டிரம்ஸ் சிவமணிக்கு, கிருஷாணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆனாலும் அதிர அதிர அவர் மனசுக்குள் முளைத்து இருக்கிறது இன்னொரு காதல் . அது ஊரறிய கல்யாணம் வரையும் வந்திருக்கிறது.
வடக்கத்தி கஜோல் பாடகர்களான ராஜ்குமார், இந்திராணி ரிஜ்வி மகளான ருனா ரிஷ்வி என்பவருடன் சிவமணிக்கு ஏற்பட்ட காதல்தான் இப்படி கல்யாணம் வரை போகிறது. இவர்கள் இருவரும் இணைந்து சர்வதேச அளவில் பல்வேறு கச்சேரிகளை நடத்தியுள்ளனர்.
ருனா ரிஷ்வி இந்திப் படங்களில் பாடி வருகிறார். தமிழில் அரிமா நம்பி படத்தில் அவரை பாடவைத்தார் சிவமணி. இப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 10ந் தேதி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவமணியின் நண்பர் ஒருவர் சிவமணியிடம் “பெரிய பக்தியாளரும் ஆன்மீகவாதியுமான நீங்கள் இப்படி மனைவி குழந்தைகள் இருக்கும்போது இன்னொரு பெண்ணை மணக்கலாமா ? இது பாவம் இல்லையா ?” என்று கேட்டபோது ” நான் என் மனைவியையும் குழந்தைகளையும் கைவிடப் போவதே இல்லை . அவர்கள்தான் என் வாழ்வில் முக்கிய இடத்தில் இருப்பார்கள். தவிர அவர்களுக்கு இந்தக் கல்யாணத்தால் எந்த இழப்பும் வரப்போவது இல்லை என்பது எனக்கும் தெரியும் . மற்றபடி காதலை எப்படி தடுக்க முடியும்? எனக்கும் ருனாவுக்கும் காதல் வந்தது . எங்களை இனி பிரிக்க முடியாது என்ற நிலையில் திருமணம் செய்து கொள்கிறோம் ” என்றாராம்.
நண்பர் அதோடு விட்டிருக்கலாம் . “இந்தப் பாவம் நாளை உங்கள் குழந்தைகளை தண்டிக்காதா?” என்று ஒரு கேள்வி கேட்க , “ஏய் .. நான் இவ்வளவு தெளிவா சொல்லியும் நீ முட்டாள்தனமா யோசிக்கிறியே. உன் அறிவுகெட்ட தனமான கருத்துப் படியே இது பாவம்னாலும் அது எப்படி பிள்ளைகளை பாதிக்கும் ?லூசா நீ? ” என்று சாமி ஆடி … ம்ஹும் டிரம்ஸ் ஆடி விட்டாராம் சிவமணி