ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்க, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரிக்க, அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுத,
ஷாருக்கான், போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருக்கும் படம் டங்கி டிராப் 4.
வெளியான 24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது இந்தப் படத்தின் டிரெய்லர் .
தனது சொந்த சாதனைகளை முறியடிப்பதில் திரையுலகின் வல்லவராக அறியப்படும் ஷாருக், சமீபத்தில் மெகா ஹிட்டான ஜவானிலும் அதையே செய்திருந்தார், தற்போது டங்கி மூலன் மீண்டுமொரு முறை அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்
நான்கு நண்பர்களின் இதயத்தைத் தூண்டும் கதையையும் வெளிநாட்டுக்கு செல்லும் கனவில் அவர்களின் தேடலையும் நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சொல்லும்படி உருவாக்கப்பட்ட இந்தப் படம்,
வேறுபட்ட மனிர்தர்களின் கதைகளை ஒன்றாக பின்னி, அந்த கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அதன் நகைச்சுவை பக்கத்தையும், அதற்கான இதயம் அதிரும் பதில்களையும் சொல்கிற – அன்பு மற்றும் நட்பின் பெருமையை விவரிக்கும் படம் என்கிறார்கள்.
இந்த டிசம்பரில் திரைக்கு வருகிறது படம்.