விடுமுறைக் காலம் முடிந்த பிறகு விடாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது டங்கி. குடும்பங்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததே அதற்குக் காரணம் .
மக்களின் சுயமான பாராட்டு தொடர்ந்து இந்தப் படத்துக்கு ரசிகர்களை திரையரங்குகளுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது . நல்லுணர்வுப் படம் என்ற பெயர் பெற்றதால் வணிகரீதியிலும் தர ரீதியாகவும் பாராட்டுப் பெற்று இருக்கிறது இந்தப் படம்.
நானூறு கோடி என்ற உலக அளவிலான பொதுவான அளவுகோலைத் தாண்டியும் இந்திய அளவில் இரு நூறு கோடி என்ற எல்லையைக் கடந்தும் வசூலை வாரிக் குவிக்கிறது டங்கி
இதன் மூலம் பதான், ஜவான் இப்போது டங்கி என்று 2023 ஆம் ஆண்டு ஹாட்ரிக் வெற்றி கொடுத்து ஜொலிக்கிறார் ஷாருக் கான்.
பதான் 1050.30 கோடியும் ஜவான் 1148.32 கோடியும் ஒட்டுமொத்தமாக வசூலித்த நிலையில் டங்கி நான்கயு மடங்கு தாண்டி 400 கோடியைக் கடந்திருக்கிறது
ராஜ்குமார் ஹிரானியின் இந்தப் படம் இந்த அளவு மக்களைக் கவர்வதற்குக் காரணம் , உலகெங்கும் நாடிழந்து புலம் பெயர்ந்து வாழும் மக்களின் உணர்வுக்கு வடிவம் கொடுத்ததே .
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படங்கள் வெற்றி பெறுவதும சாதனை படைப்பதும் இயல்பானதே என்பதற்கு இப்போதைய உதாரணம்தான் டங்கி