இன்றைய வாழ்க்கை முறையால் இளம் வயதிலேயே சர்க்கரை, இருதயம் உள்ளிட்ட நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகும் மக்கள், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டார்கள். இருப்பினும், உடற்பயிற்சி மூலமாக உடலை பேணிக்காத்தாலும், இன்றைய அவசர வாழ்க்கையில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதும்,
அதனால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது. இதை தடுப்பதற்கான நல்ல வழிமுறைதான் ‘தியான யோகா’.
யோகா என்பது நல்ல உடற்பயிற்சி தான் என்றாலும், அதை வெறுமனே செய்தால், அது முழு பலனையும் அளிப்பதில்லை.
தியானத்துடன் சேர்த்து யோகா செய்யும் போது, மனதை கட்டுப்படுத்தி அதன் மூலம் நமது உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இப்படிப்பட்ட தியானா யோகாவில் புகழ்பெற்று விளங்கும் தமிழ்வேல் சுவாமிகள், பங்கேற்கும் ‘தியான யோகா’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 7.30 மணியில் இருந்து 7.40 வரை ஒளிபரப்பாகும் ‘தியான யோகா’ நிகழ்ச்சியில்,
தமிழ்வேல் சுவாமிகள், தியான யோகாவின் நன்மைகள், அவற்றால் ஏற்படும் பலன் உள்ளிட்டவைகளை விளக்குவதுடன், தியான யோகா செய்யும் முறையையும் சொல்லிக் கொடுக்கிறார்.
கடந்த 3 வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ‘அருள் உரை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி வந்த தமிழ்வேல் சுவாமிகளின் இந்த ‘தியான யோகா’ உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் இன்றி,
மன அமைதியை கொடுக்கும் நிகழ்ச்சியாகவும் உள்ளது.மனைதை அமைதிப்படுத்தாமல், கவனத்தை வேறு எங்கோ வைத்துக் கொண்டு யோகா செய்வதினால் எந்தவித பயனமும் இல்லை
எனவே, முதலில் மனதை அமைதிப்படுத்தி, ஆத்மாவை ஒருநிலைப் படுத்திய பிறகு யோகா செய்வதால், நமக்கு உண்டாகும் பல்வேறு நோய்களும் குணமாகிவிடுகிறது.
தியானத்துடன் யோகா கற்றுக் கொள்வதன் மூலம் மனம் அமைதியடைந்து, பக்குவப்படுவதுடன், உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாவதும், ஆத்மா புனிதமாவதும் இதன் சிறப்பு அம்சமாகும்.
தியானா யோகா சொல்லிக் கொடுப்பதோடு, நோய்களுக்கான சிறப்பு தியானா யோகா குறித்தும் தமிழ்வேல் சுவாமிகள், இந்த நிகழ்ச்சியில் கற்றுக் கொடுக்கிறார்.
ஒவ்வொரு வாரமும் ஒரு நோய் குறித்தும், அதனை குணமாக்க எப்படிபட்ட தியான யோகா மேற்கொள்ள வேண்டும், என்பது குறித்தும் விவரிக்கும் தமிழ்வேல் சுவாமிகள்,
கடந்த வாரம் சர்க்கரை நோய் குறித்து விவரித்தது பெறும் பயன் அளித்தது. தற்போது இருதய நோய் குறித்தும், அதற்கு ஏற்ற தியானா யோகா குறித்தும்
அவர் சொல்லிக் கொடுப்பவைகள் மக்களுக்கு பெரும் பலன் கொடுத்து வருகிறது. விஜய் டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது தமிழ்வேல் சுவாமிகளின் ‘தியான யோகா’ நிகழ்ச்சி.!