அங்காடி தெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்க, அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க

நாயகியாக ஷாலு நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் ,  அவருக்கு தங்கையாக நிஷா, 

இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா,அம்பானி சங்கர், தியா, தென்னவன்,வையாபுரி,  ஆகியோர் நடிக்க, 

ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கிய ராம்சேவா  கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கும் படம்  “ என்  காதலி சீன் போடுறா “ 

ஒளிப்பதிவு           –        வெங்கட்                                                                                                                                  

இசை           –        அம்ரிஷ்                                                                                                                             

பாடல்கள்    –        ராம்ஷேவா, ஏகாதசி                                                                                                              

கலை           –        சோலைஅன்பு                                                                                                                         

நடனம்        –        சிவாலாரன்ஸ்சாண்டி                                                                                                         

ஸ்டன்ட்      –        மிரட்டல் செல்வா                                                                                                                 

எடிட்டிங்     –        மாரிஸ்                                                                                                                              

தயாரிப்பு மேற்பார்வை  –  தண்டபாணி                                                                                                     

தயாரிப்பு  –  ஜோசப் பேபி.         

23 நாட்களில் மொத்த படத்தையும் எடுத்து முடித்துள்ளார்கள் . படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்

முன்னோட்டம் மற்றும் பாடல்களை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது .  

நல்ல ஒளிப்பதிவு.  தரமான படமாக்கல் . நல்ல நடிப்பு , சண்டை பாடல் காட்சிகள் ! அம்ரேஷ் இசையில் பாடல்கள் அருமை 

23 நாட்களில்  இவ்வளவு சிறப்பாக எடுக்க முடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது . 

விழாவில் பேசிய  அம்மா கிரியேசன்ஸ் டி .சிவா , ” படத்தின் தயாரிப்பாளர் ஜோசப் பேபி எல்லோருக்கும்

முழு சம்பளத்தையும் முன்பே கொடுத்து படப்பிடிப்பை ஆரம்பித்தார் ” என்று பாராட்டினார் . 

கே. பாக்யராஜ் தனது பேச்சில் , ” இவ்வளவு குறைவான நாட்களில் இவ்வளவு சிறப்பாக

படத்தை எடுத்து இருக்கும் இயக்குனர் ராம் சேவா பாராட்டுக்குரியவர் ” என்றார் . 

“படத்தின் பாடல்களில் எனக்கு முழு திருப்தி ” என்றார் இசை அமைப்பாளர் அம்ரேஷ்   ” சார்லி சாப்ளின் படத்தில் செந்தில் கணேஷ் ராஜ லட்சுமியை

பாட வைத்தது போலவே இந்தப் படத்திலும் ஒரு பாடல் பாட வைத்துளேன் . மிக நன்றாக வந்துள்ளது ” என்றார்                                                                                                                

 இயக்குனர் ராம்சேவா பேசும்போது, “ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு

முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்…

சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும்

என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாக வும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம்.

மனோபாலா  காமெடியில்  கலக்கி இருக்கிறார். 

நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ்.

சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் –  ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள்.

“ நிலா கல்லுல செதுக்கிய சிலையா “   என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த  ஒரு ஐயமும் இல்லை.

வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த

என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட்மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது.  படம் விரைவில் திரைக்கு வர உள்ளது” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *