எதிர்பார்ப்பில் ‘எனக்குள் ஒருவன்’

enak 1

கன்னடத்தில் பவன் குமார் என்பவர் ‘கிரவுட் ஃபண்டிங்’ என்ற முறையில் ஆயிரக்கணக்கானவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கி அறுபத்தைந்து லட்ச ரூபாய் திரட்டி தயாரித்து இயக்கிய லூசியா என்ற கன்னடப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டதோடு தரத்தின் அடிப்படையிலும் கொண்டாடப்பட்டது .

அந்தப் படத்துக்கு பெரும்பகுதி பின்னணி இசை அமைத்த நம்ம ஊரு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,படத்தைப் பற்றி திருக்குமரன் என்டர் பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளரான பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் சொல்ல ,படத்தின் தமிழ் மறுஉருவாக்க உரிமையை வாங்கிய  சி.வி. குமார்….பீட்சா படத்தில் இணை இயக்குனராக பணி  புரிந்து மனம் கவர்ந்த பிரசாத் ராமர் என்பவரை அழைத்து, படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்

enak 8

அபி டி சி எஸ் நிறுவனம் சார்பில் அபினேஷ் இளங்கோவன் வழங்க , திருக்குமரன் என்டர்பிரைசஸ் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் படத்துக்கு ஹீரோவாக , கதா நாயகியாக வந்தார்  தீபா சன்னிதி .இவர் கன்னடத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர்

பீட்சா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கோபி அமர்நாத் ஒளிப்பதிவில்  சந்தோஷ் நாராயணனே இதற்கும் இசை அமைக்க…..லூசியா படத்தை அப்படியே காப்பி  ரீமேக் அடிக்காமல் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு பிரசாத் ராமர் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்.

படத்தில் சித்தார்த்துக்கு இரண்டு கேரக்டர்கள் .

enak 6

திரையரங்கில் படம் போட்ட பிறகு உள்ளே வரும் பிரகஸ்பதிகள் இருட்டில் தட்டுத் தடுமாறி அடுத்தவர் மேல் விழுந்து விடாமல் இருப்பதற்காக (இதான் சமயம் என்று கரெக்டாக பொம்பள மேல விழற ஆட்களும் இருப்பாங்களே!) அவர்களின் சீட் நம்பரை பார்த்து, டார்ச் உட்கார வைக்கும் தியேட்டர் உதவியாளர் கதாபாத்திரம்  ஒன்று.

அவனது கற்பனையில் அவனே ஒரு மாபெரும் நடிகராக மாறுகிறான் . அந்தக் கதாபாத்திரம் ஒன்று .

இப்படியாக ஒரு எளிய ஏழை மனிதன்,  தனது  சக்திக்கு மீறிய கற்பனைக் கனவுகளுக்கு உள்ளே நுழைந்து வாழ்ந்து பார்க்கும் விஷயங்களை காட்சிப் படுத்தும் கதையில்,  அந்த எளிய மனிதனின் இயல்பான வாழ்க்கையை வண்ணத்திலும் , கலர்புல்லான கனவு வாழ்க்கையை கருப்பு வெள்ளையிலும் காட்டுகிறார்கள் .

enak 7

படத்தைப் பற்றி மிக உற்சாகமாக பேசுகிறார் சித்தார்த்

” தியேட்டர் அசிஸ்டன்ட்  கேரக்டருக்காக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து இருக்கிறேன் . படப்பிடிப்பில் நான் இருப்பேன் . ஷூட்டிங் பார்க்க வருபவர்கள் என்னிடமே யாரு ஹீரோ என்று கேட்பார்கள் . நானும் என் பேரை நானே சொல்வேன் . ரசிகர்கள் மட்டுமல்ல நடிகர் நரேனுக்கே என்னை அடையாளம் தெரியவில்லை.

உண்மையில் இந்த எனக்குள் ஒருவன் படத்தை லூசியாவின் ரீமேக் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது.லூசியா படத்தின் அடிப்படை கதையை மட்டும் எடுத்துக் கொண்டு திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் .அதுவும் எனக்குள் ஒருவன் படத்திற்கு அவர் எழுதி இருக்கும்  வசனங்கள் பிரம்மாதமானவை .  நான் பிரம்மித்து விட்டேன் .  வசனம் முழுக்க கவிதை நயத்தை கொட்டி இருக்கிறார். இதெல்லாம் லூசியா படத்தில் கிடையாது .

enak 5

உண்மையில் லூசியா படத்தை இயக்கிய பவன் குமார் எனக்குள் ஒருவன் படத்தை பார்க்கும்போது அவருக்கே இது புது படம் போலதான் இருக்கும் . 

எனக்கு இருக்கும் சாக்லேட் பாய் , அழகான பையன் போன்ற ஆபத்தான இமேஜ்களை இந்தப் படம் மாற்றும் . இனி எந்த மாதிரி கதையிலும் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம் என்ற நிலை வரும் .

அது மட்டுமல்ல .. நிச்ச்சயமாக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். அந்த அளவுக்கு மிக சரியான ஒரு படத்துக்காக முழுமையாக உழைத்துள்ளோம் ” என்கிறார் சித்தார்த். 

DSC_0888

படத்தின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில் எனக்குள் ஒருவன் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது . வாழ்த்துகள்

 

 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Comments are closed.