எஸ் எஸ் வி எஸ் எஸ் எஸ் கே புரடக்ஷன்ஸ் சார்பில் (எழுத்துப் பிழை எதுவும் இல்லை) ஆர்.செல்வம் தயாரிக்க…
சுரேஷ் ஷர்மா , அதிதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி ஆகிய புது முகங்களோடு டெல்லி கணேஷ், சுவாமி நாதன், மீரா கிருஷ்ணன் , சாம்ஸ், பாலாஜி ஆகியோர் நடிக்க, ஆர்.செந்தில் நாடன் இயக்கும் படம் ‘ fb – ஸ்டேட்டஸ போடு சாட் பண்ணு’.
இந்த செந்தில் நாடன் இதற்கு முன்பு சிவி என்ற படத்தை இயக்கியவர் . சிவி என்பது பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பை குறிக்கும் சொல் .
fb என்று இவர்கள் சொல்வது ஃபேஸ்புக்கைதான் .
முகநூலை வைத்து எவ்வளவோ கதைகள் பண்ணலாமே. இது என்ன கதை ?
“நாகரீகம் வளர வளர விஞ்ஞானமும் வளர்கிறது . நாகரிகமும் விஞ்ஞானமும் நவ நாகரிகத்தை நோக்கி வேகமாக வளரும் போது பிரச்னைகளும் அதிகம் ஆகின்றன. ” என்று பீடிகை விளக்கம் தரும் இயக்குனர் செந்தில் நாடன்….
தொடர்ந்து “அப்படி ஒரு விசயத்தைதான் எங்கள் படமும் பேசுகிறது . இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஹீரோவும் ஃபேஸ்புக்தான். வில்லனும் ஃபேஸ்புக்தான். ஃபேஸ்புக்கில் புரஃபைலும் ஸ்டேட்டஸும் போடுகிறவர்களில் எத்தனை பேர் உண்மையை சொல்கின்றனர்?
அப்படி தவறான ஸ்டேட்டஸ் மற்றும் தகவல்கள் மூலம் அறிமுகமாகும் ஒருவர் அதே பொய்களோடு இன்னொருவரிடம் பழக , அவர்களும் அதை நம்ப ஆரம்பிப்பதால் என்னென்ன பிரச்னை வரும் ?
அப்படி நம்பியவர்களுக்கு உண்மை தெரிய வரும்போது என்ன ஆகும் என்பததைப் பேசும் படம் இது.
ஃபேஸ்புக்கை அடிப்படையாகக் கொண்ட களத்தில் எல்லோருக்கும் புரியும் ஒரு கதையைச் சொல்லி இருக்கிறேன் .
படத்தில் நடிகர் ரகுமான் ஒரு வித்தியாசமான சைக்யாட்ரிஸ்ட் கேரக்டரில் நடித்து இருக்கிறார் . ஆரம்பத்தில் அந்தக் கேரக்டருக்கு வேறு சில நடிகர்களை அணுகியபோது அவர்கள் அதில் நடிக்கத் தயங்கினர் . கதையை மாற்றச் சொன்னார்கள் .
ஆனால் சொன்ன கதையை அப்படியே ஏற்றுக் கொண்டு சிறப்பாக நடித்து இருக்கிறார் ரகுமான் ” என்கிறார் இயக்குனர் .
”படத்தில் நிறைய ஹீரோக்கள் ஹீரோயின்கள் இருக்கிறார்கள் போல இருக்கிறதே?” என்று கேட்டால் ” இவர்கள் எல்லோருமே முக்கியக் கேரக்டர்கள்தான் . ஆனால் படத்தின் ஹீரோ , வில்லன் இரண்டுமே ஃபேஸ்புக்தான் ” என்றே பதில் வருகிறது
கமென்ட் அடிக்கிற மாதிரி இல்லாம லைக் பண்ற மாதிரி இருக்குமா ?



