”உழைப்பு தெரிந்தது” – ஃபைன்டர் படக்குழுவை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து

Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”. படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரனே இயக்கியுள்ளார்.  முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் சென்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் நடிகர் சார்லி பேசியபோது, ” இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது, அண்ணன் வைரமுத்து அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்குவது எங்கள் குழு அனைவருக்கும் பெருமை, இந்தப் படத்தில் பெரிய கதாநாயகன்கள் இல்லை இந்த படத்தில் கதைதான் நாயகன் , வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுத ஒப்புக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத். வைரமுத்து அவர்கள் நல்ல கவிஞர் என்பதை விட மிகவும் நல்ல மனிதர் நன்றி மறவா மனிதர். இந்தப் படம் பலரது உழைப்பில் உருவானது. படம் நன்றாக வந்துள்ளது “என்றார் 
தயாரிப்பாளர் G தனஞ்செயன் பேசியபோது, “இந்தப் படத்தின் போஸ்டர் பார்த்தவுடன் இந்த விழாவுக்கு வர ஒப்புக் கொண்டேன். அழைப்பிதழில் சார்லி இருந்தார், சார்லி பல படங்களில் நடித்துள்ளார் அவர் நல்ல மனிதர் பல சாதனைகளை புரிந்துள்ளார், இன்றளவும் நாடக மேடையில் நடித்து வருகிறார், அவர் ஆயிரம் படம் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.  ஆனால் அவர் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எறும்பு போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  அவரது நடிப்பில், இந்தப் படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும்.  இயக்குநர் வினோத்திற்கு எனது வாழ்த்துகள். எந்த ஒரு கவிஞரும் எட்டாத உயரத்தில் உள்ள வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ளார் சிறிய படைப்பிற்கு ஆதரவு கொடுத்த அவருக்கு எனது நன்றிகள்.  மக்கள் மத்தியில் இன்னும் இந்தப் படத்தை கொண்டு செல்ல வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் “என்றார். 
 
இசையமைப்பாளர் சூர்யபிரசாத் பேசியபோது, “இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அடையாளமாகவும் வைரமுத்து சார் உள்ளார் அவரது வரிகளுக்கு நான் இசையமைத்தது எனக்கு கனவு  மாதிரி இருந்தது, இன்றும் என்னால் இதை நம்ப முடியவில்லை. எங்கள் தேவை அறிந்து  அட்டகாசமான பாடல்களை கொடுத்தார். சார்லி சாருக்கு எனது நன்றி இந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் சென்ட்ராயன் சாரும் நன்றாக நடித்துள்ளார், என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி.  இந்தப் படத்தின் இயக்குனர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் “என்றார். 
கவிப்பேரரசு வைரமுத்து பேசியபோது, “இந்த விழாவிற்கு வந்த தயாரிப்பாளர் குஞ்சு மோகன் அவர்களுக்கு நன்றி, சார்லி மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பான வணக்கம், சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான்,  கடைசி உழைப்பாளியும் நான்தான்.   சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை அது ஒரு பல்கலைக்கழகம்,  நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. 
 
இயக்குநரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர், அவர்களை உற்று கவனித்தேன் அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல சரித்திரம் படைக்க வந்தவர்கள்.  நான் புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதில்லை அவர்களது உழைப்பைதான் பார்ப்பேன், இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது. தயாரிப்பாளர் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் . இன்று சினிமாவில் தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது அரிது , இந்த தயாரிப்பாளருக்கு எந்த ஐயமும் இல்லை படத்தை நன்றாக தயாரித்துள்ளார்.  படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும், 
 
இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு நிகழ்வை சொல்லுமாறு அமைந்துள்ளது. சினிமாவில் குறை சொல்வது எளிது ஆனால் நிறை காண்பது அரிது அதனால் யாரும் எழுதட்டும் யாரும் பாடட்டும் அதில் யாரும் நடிக்கட்டும் ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும்,  இதைத்தான் நான் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன், 
 
இந்தப் படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன் ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சனை ஏற்படுத்துகிறது என்றனர், தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் தமிழன் என்பதால் இதை நான் ஒப்புக் கொண்டேன். சார்லி ஒரு கெட்டிகார நல்லவர் நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறார், அவனது கலை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அனைவரையும் நான் சந்திப்பேன், படக்குழு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், “என்றார். 
தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோகன் பேசியபோது, “இந்த விழாவிற்கு என்னை அழைத்த படக்குழுவிற்கு எனது  வாழ்த்துக்கள் , இது போல திறமையான இளம் தலைமுறை படைப்பாளிகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டும். சார்லி எனது முதல் படத்திலிருந்து நடிக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள்.  தயாரிப்பாளர் சுப்ரமணி அவர்களுக்கு எனது வாழ்த்துகள், படம் கண்டிப்பாக வெற்றி பெறும்”என்றார். 
 
நடிகர் சென்ட்ராயன் பேசியபோது, “இயக்குனர் வினோத் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார் ,படம் மிகவும் அருமையாக வந்துள்ளது , படக்குழுவில்  அனைவருமே மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர் அதற்கேற்ற பலனை நாங்கள் அடைவோம், வைரமுத்து சார் எங்களுடன் இணைந்தது பெரும் ஆதரவு, தயாரிப்பாளர் சுப்ரமணி சார் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்.  “என்றார். 
 
அரபி புரொடக்சன்ஸ் வெற்றி பேசியபோது, “இந்த அரபி தயாரிப்பு மூலம் ஈழத்தில் பதினைந்து ஆண்டுகள் பல படைப்புகளை கொடுத்துள்ளோம், இன்று எங்களின் முதல் தமிழ் படைப்பு அதற்கான விழாவில் நன்றி தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் வினோத் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் , மேலும் கவிஞர் வைரமுத்து ஐயா அவர்களுக்கும் எனது நன்றி.  அவர் இந்தப் படத்திற்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளார், நடிகர் சார்லி அவர்களுக்கும் எனது நன்றி, ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்து வந்துள்ள சோசியல் மீடியா நண்பர்களுக்கு எங்களது நன்றி ,படக்குழு அனைவருக்கும் எனது நன்றி, ஒரு சிறந்த படைப்பை எங்களுக்கு அளித்துள்ளனர் , இங்கு வந்து விழாவை சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றிகள். “என்றார். இயக்குநர் தயாரிப்பாளர் வினோத் ராஜேந்திரன் பேசிய போது, ”   இந்த விழாவிற்கு வந்ததோடு அல்லாமல், இப்படத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்த அய்யா வைரமுத்து, நடிகர் சார்லி ஆகியோருக்கு என் நன்றிகள். படத்தில் அனைவருமே தங்கள் படம் போல் கருதி மிக கடினமான உழைப்பை  தந்துள்ளார்கள். நாங்கள் நினைத்ததை சுவாரஸ்யமான படமாக உருவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும்  படம் கண்டிப்பாக  பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். இவ் விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. “என்றார் 
 
தொழில்நுட்ப குழு விபரம் 
தயாரிப்பு நிறுவனம் – Arabi production  & Viyan ventures 
தயாரிப்பாளர்கள் – ரஜீஃப்  சுப்பிரமணியம் &  வினோத் ராஜேந்திரன் 
இயக்கம் – வினோத் ராஜேந்திரன் 
ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி 
எடிட்டர் – தமிழ்குமரன் 
கலை இயக்கம் – அஜய் சம்பந்தம் 
இசை – சூர்ய பிரசாத் 
மக்கள் தொடர்பு – A ராஜா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *