பிறந்த நாள் பார்ட்டிகளில் ஜாலி என்ற பெயரிலும், பிறந்த நாள் கொண்டாடுபவரை டீஸ் செய்கிறோம் என்ற பெயரிலும்,
அவர் மேல் வெண்ணிற நுரை கொட்டும் ஸ்ப்ரேயை அடித்து கெக்கலிப்பது இப்போது வழக்கமாக இருக்கிறது .
அப்படி ஸ்ப்ரே அடித்து அந்த வெண்ணிற நுரை வழிய, பிறந்தநாள் கொண்டாடுபவர் மெழுகுவர்த்தி ஏற்றி ஊதுவது, நமக்கு ஒரு வேண்டாத கலாச்சாரமாகவே போய்விட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும் .
அப்படி ஸ்ப்ரே நுரை வழிய மெழுகுவர்த்தி ஏற்றும் போது அந்த நுரை பெட்ரோல் போல பற்றிக் கொள்ளும் விபரீதம் இப்போது நிறையவே நடக்கிறது.
அப்படி ஒரு சிறுவனின் தலையில் அவனது அப்பாவே ஸ்ப்ரே அடித்து மொழுகி விட்ட நிலையில், அவன் மெழுகுவர்த்தி ஏற்ற…..
அவன் தலை குபீர் என தீப்பிடித்து எரியும் திகீர் விபரீத வீடியோவை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது .
அதே போன்ற இன்னொரு வீடியோவைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்
பார்த்து பதை பதைச்சச்சா ?
அமைதி ! ரிலாக்ஸ் ! கூல்!
இப்படி விபரீதம் ஏற்படுத்தும் இந்த ஸ்ப்ரேக்கள் சீன நாட்டில் தயாரிக்கப்பட்டு நமது அயோக்கிய அரசியல்வாதிகள் மற்றும் ஊழலுக்கு சோரம் போகும் அதிகார வர்க்கத்தின் உதவியோடு இந்தியாவுக்குள் நுழைகிறது .
இந்த ஸ்ப்ரே மட்டுமல்ல .. இது போன்ற பல ஆபத்தான சீனத் தயாரிப்புகள் இந்தியாவெங்கும் ஸ்லீப்பர் செல்களாக மார்க்கெட்டில் குவிந்து கிடக்கின்றன .
மேலும் மேலும் வந்து கொண்டிருக்கின்றன .
இது போன்ற சீனப் பொருட்களால் இந்திய மக்களுக்கு பெரிய அளவில் ஏற்படப் போகிற உயிராபத்துகள் , ஆரோக்கிய சீர்கேடு , அதோடு இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் அதலபாதாள பின்னடைவு..
இது போன்ற உருப்படியான விசயங்களை உணர்வுப் பூர்வமாகவும் சமூக அக்கறையோடும் பேசும் படம்தான்…..
ஆர்ட்டின் பிரேம்ஸ் மற்றும் டி ஆர் எஸ் ஸ்டுடியோஸ் சார்பில் டி.ஆர்.எஸ். அன்பு மற்றும் வி .சுரேஷ் நாராயண் இருவரும் தயாரிக்க,
‘பாலை’ படத்தில் நடித்த சுனில் குமார், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் இணைந்து நடிக்க,
ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணனிடம் பணி புரிந்த சுகன் கார்த்தி என்பவர் எழுதி இயக்கும் மூன்றாம் உலகப் போர் படம் .
இந்தப் படம் எடுக்கப்பட்டதன் நோக்கமே சீனப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான் .
இந்தப் படத்தைப் பார்த்தால் இந்த விபரீதத்தின் வீரியம் இன்னும் நன்றாகப் புரியும் .
அதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்