விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு . ஒருவேளை அதுவே உல்டாவாக ஆகி விட்டால் என்னென்ன விபரீதம் ஏற்படும் என்ற அடிப்பையில் அமைந்த கதையில்
காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரில்லிங் அனுபவமாக உருவாகும் படம் ‘விதி- மதி உல்டா’
டார்லிங் 2 படத்தில் ஹீரோவாக நடித்தவர் ரமீஸ் ராஜா , தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம்,மிகுந்த பொருட்செலவில் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,
அவருக்கு ஜோடியாக ஜனனி அய்யர் நடிக்க,
டேனியல் பாலாஜி , கருணாகரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க,
இயக்குனர் ஏ ஆர் முருகதாசின் உதவியாளர் விஜய் பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் இது
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை , சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் இயக்குனரான பா. ரஞ்சித் அண்மையில் வெளியீட்டார்.
நிகழ்வில் ரமீஸ் ராஜா , விஜய் பாலாஜி, படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி , தயாரிப்பு நிர்வாகி செல்லதுரை, பத்திரிகை தொடர்பாளர் பெரு.துளசி .பழனிவேல் ஆகியோர் பங்கு வகித்தனர்