
ஒருவேளை ரொம்ப குழந்தைத்தனமான பேயோ என்னவோ!
ஆனால் இதன் மூலம், கோடம் பாக்கத்தையே கொத்துக் கறி போடும் பேய்ப்பட அலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாசையும் விட்டு வைக்கவில்லை என்பது தெரிகிறது.
பொதுவாக ஜி.வி.பிரகாஷ் இப்போது என்ன செய்கிறார் என்று கேட்டால் பென்சில் என்ற படத்திலும் திரிஷா இல்லன்னா நயனதாரா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் தமிழ் (சினிமா)கூறும் (கோடம்பாக்க) நல்லுலகம் கூறும் .
ஆனால் இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல …

சத்தமே இல்லாமல் சைலண்டாக ஒரு பேய்ப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் .
தெலுங்கில் வெற்றி பெற்ற ஒரு படத்தைக் கொண்டு வந்து டார்லிங் என்ற பெயரில் தமிழில் ரீமேக்குகிறார்கள். அதன் ஹீரோவாக கடந்த 45 நாட்களாக இரவோடு இரவாக நடித்துக் கொண்டு இருக்கிறார் ஜிவிபிரகாஷ் . கிட்டத்தட்ட முக்கால்வாசிப் படம் முடிந்து விட்டதாம்.
பேய்ப்படமா இருக்கட்டும் …அதுக்காக ஷூட்டிங்கை கூடவா மாய மந்திரமா நடததணும் ?