அண்மையில் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடிய ஹரிஷ் கல்யான், முதன் முதலாக தான் முழு நீள ஆக்ஷன் படமாக நடித்து இருக்கும் டீசல் படத்தின் ரிலீசுக்கு ஆவலோடு காத்திருக்கிறார். அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கும இந்தப் படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. .
சசி குமார், கருணாஸ், வினை ராய், அனன்யா, விவேக் பிரசன்னா, காளி வெங்கட் தங்கதுரை ஆகியோர் உடன் நடித்து இருக்கிறார்கள்.
மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் போகும் நிலையில் படத்தை third eye entertainment சார்பில் தயாரித்து இருக்கும் தேவராஜுலு படம் சிறப்பாக வந்திருக்கிறது என்கிறார்.
படத்துக்கு இசை திபு நினன் தாமஸ். ஒளிப்பதிவு எம் எஸ் பிரபு, எடிட்டிங் சான் லோகேஷ்