செந்தூர் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹிட்லர்”.
இப் படத்தில் , ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைக் கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியபோது, “இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர் என ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். நடிகை ரியா சுமன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். விஜய் ஆண்டனி மனிதநேய மிக்க மாமனிதன் அவர். அவரது சொந்தப் படத்தை விட இந்தப் படத்தின் மீது அக்கறை கொண்டு என்னிடம் எப்போதும் விசாரித்துக் கொண்டிருப்பார். அவரது மனதிற்கு நன்றி. “ஹிட்லர்” மிகச் சிறந்த படைப்பாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்”என்றார்.
எடிட்டர் சங்கத்தமிழன், படம் நல்லதொரு ஆக்சன் திரில்லராக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.”என்றார்.
காஸ்ட்யூமர் அனிஷா , ” இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்த டீமிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக வேண்டுமென்று வேண்டுகிறேன் நன்றி.”என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் முரளி பேசியபோது, ”இந்தப் படம் தொடங்கிய போது விஜய் ஆண்டனி சாருக்கு ஒரு ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டது. நாங்கள் அவரை பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அவர் வெகு இயல்பாக இருந்து எங்களுக்கு ஒத்துழைப்புத் தந்து நடித்தார். “ஹிட்லர்” மிகப்பெரிய ஹிட்டாகும் எல்லோருக்கும் நன்றி.”என்றார்.
இசையமைப்பாளர் விவேக் பேசியபோது, “ஒரு நல்ல திரைப்படத்தில் நாங்களும் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. த. உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் படமாக இருக்கும். “என்றார்.
இசையமைப்பாளர் மெர்வின் பேசியபோது, “நாங்கள் நாக்க முக்க பாடல் வெளியான காலத்திலிருந்து விஜய் ஆண்டனி ரசிகர்கள். இப்போது அவருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி. ஒரு நல்ல திரைப்படத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டிப்பாக இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம். “என்றார்.
நடிகர், இயக்குநர் தமிழ் பேசியபோது, ““ஹிட்லர்”, மிக அழுத்தமான தலைப்பு இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஒரு படம் முடிந்த பிறகு எல்லோருக்கும் நன்றி சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பார்வையாளர்களுக்கும் இந்தப்படம் நல்ல அனுபவம் தரும்”என்றார்.
நடிகை ரியா சுமன் பேசியபோது, “எனக்கு இந்தப் படம் மிக முக்கியமான படம். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். “என்றார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியபோது, “இந்த படம் பேரு தான் “ஹிட்லர்”, ஆனால் டைரக்டர் சாஃப்ட், ஹீரோ சாஃப்ட், ஹீரோயின் சாஃப்ட் ஆனால் பெயர் மட்டும் “ஹிட்லர்”. இந்தப் படம் சூப்பராக இருக்கும். விஜய் ஆண்டனி சார் படத்தில், இது வித்தியாசமாக இருக்கும்.”என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியபோது, “ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். விவேக், மெர்வின் இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். “என்றார்