வித்தியாசமே உன் பெயர் தான் ‘ஜில் ஜங் ஜக்’ என்பதோ, என்னும் அளவுக்கு படத்தின் எல்லா அம்சங்களும் வித்தியாசமாகவே இருக்கிறது.கதையின் வண்ணமும், கதாசிரியரின் எண்ணமும்,நடிக நடிகையர் தேர்வாகட்டும்,
தெறிக்கும் பாடல்கள் ஆகட்டும், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் டீசர் ஆகட்டும்,கண் கவர் ஒளிப்பதிவு ஆகட்டும், வித்தியாசமான் விளம்பர யுத்திகள் ஆகட்டும்,என்று வித்தியாசம் பயணித்துக் கொண்டே இருக்கிறது
தற்போது தணிக்கை அதிகாரிகள் , இந்தப் படத்துக்கு U /A சான்றிதழ் கொடுத்த உடனே தன மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லும் குணம் படைத்த சித்தார்த் சமூக வலைதளத்தில் ,
ட்விட்டரில் தன கருத்தை தெரிவித்தார். ‘ ரொம்ப சந்தோசம்,சுத்தமான , அமைதியான, தெய்வீகமான U/A கிடைத்ததற்கு நன்றி என்றுக் கூறி உள்ளார்.
படமெங்கும் உள்ள வித்தியாசம் இதிலும் தெறிப்பதை கண்டு வித்தியாசமான படங்களைக் கண்டு ரசிக்கக் காத்து இருக்கும் ரசிகர்கள் ‘ஜில் ஜங் ஜக்’ உற்சாகமாகிறார்கள்.