
1978 ஆம் ஆண்டு நாடகமாக நடத்தப்பட்டு பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , ஒய் ஜி மகேந்திரன் , சுஜாதா ஆகியோர் நடிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய பரிட்சைக்கு நேரமாச்சு படத்தை மீண்டும் நாடகமாக்கி சிவாஜி நடித்த நரசிம்மாச்சாரி வேடத்தில் ஒய் ஜி மகேந்திரன் நடித்து மேடை ஏற்றுவது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில்…
“தீவிர சிவாஜி ரசிகரான நீங்கள் சிவாஜி திரைப்படத்தில் நடித்த ஒரு கேரக்டரை இப்போது நீங்கள் நாடகத்தில் ஏற்கிறீர்கள் . அவரை இமிடேட் செய்து நடிப்பீர்களா?”
— என்ற கேள்விக்கு பதில் அளித்த ஒய் ஜி மகேந்திரன்….
“சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் ஒருவன் நடிகனாக முடியாது . அதில் தவறும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது நடிப்பில் இன்ஸ்பயர் ஆகிக் கூட நடிக்கலாம். ஆனால் அவரை இமிடேட் செய்து நடிக்க மாட்டேன் . அது அவருக்கு பிடிக்காது .
‘என்னை இமிடேட் செய்தவன் நாசமாகப் போவான்’ என்று அவர் சாபமே கொடுத்து இருக்கிறார் . அந்தக் நடிப்புக் கடவுளின் சாபத்துக்கு நான் ஆளாக மாட்டேன் ” என்றார் .
நியாயமான சாபம்! நேர்மையான பயம்!!