“திரையின் வழியே சமூக சமத்துவம்”என்கிற கோட்பாட்டை நிறுவ சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வெற்றிமாறனின் ஆதரவோடு புதிய முயற்சியாக நடக்கவிருக்கிறது
IIFC -International Institute of Film and Culture – வெற்றி மாறன் , ராஜ நாயகம் ஆகியோர் அமைத்து இருக்கும் சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பின் மூலம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்.இயக்குநர் வெற்றிமாறன் முன்னெடுப்பில் தொடங்கியது.
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100 % மானியங்களுடன் முழுமையான உணவு ,குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் .
THE ELEGIBILITY CRITERIA:
● கல்வித் தகுதி: ஏதேனும் (ஊடகமல்லாத) பட்டம் பெற்றவர்கள்.
● வயது எல்லை: 21 – 25
● புவி-கலாச்சார பின்னணி: தமிழ் பேசும் + தமிழ் நாட்டிலிருந்து (முன்னுரிமை ஒரு மாவட்டத்திற்கு ஒன்று)
● சமூக-பொருளாதார விருப்பம்: சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்; முதல் தலைமுறை பட்டதாரிகள் .
❖100% மானியங்களுக்கான ஐந்து-படி தேர்வு:
ஆரம்ப ஆய்வு, எழுதப்பட்ட சோதனை, கல்வி நேர்காணல், தொழில்முறை நேர்காணல் மற்றும் வீட்டு வருகை
❖மொத்த உட்கொள்ளல்: 35-40 மாணவர்கள் (ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர்)