ஜல்லிக்கட்டுக்காக சீறிப் பாயும் ‘இளமி’

ikami-2

பசுமாட்டின் வழியே நமக்கு கிடைக்கும் பாலில் ஏ 1 மற்றும் ஏ 2 என்று இரண்டு வகை உண்டு . இதில் ஏ 2  பாலின் மூலம் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் . 

ஜெர்சி பசு உள்ளிட்ட  அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளில் இருந்து கிடைப்பது மேற்சொன்ன ஆபத்தான ஏ 2 பால்தான் . 

எனில் மேற்சொன்ன புற்றுநோய் போன்ற ஆபத்துகள் இல்லாத  ஏ 1 பால் எங்கே இருக்கிறது ? கலப்பினம் இல்லாத நாட்டுப் பசுக்களிடம்தான் இருக்கிறது . இந்தியாவில் தென்னிந்தியா ! 

ilami-6

கலப்பினம் இல்லாத நாட்டுப் பசுக்கள் பிறக்கக் காரணம் கலப்பினமில்லாத காளைகள் . அவை தமிழகத்தில்தான் அதிகம் .

அப்படி அவை தமிழகத்தில் மட்டும் அதிகம் இருக்கக் காரணம் , ஜல்லிக்கட்டுக்காக மாடுகள் வளர்க்கப்படும் விதத்தில் தொடர்ந்து அவற்றின் விந்து அணுக்கள் தரம் கூட்டப் படுவதுதான். 

இப்போது புரிகிறதா , தமிழ் நாடு என்ற ஒரு மாநிலத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை அழிக்க,

உலக அளவிலான கார்ப்பரேட் சக்திகள் இந்திய பெருமுதலாளிகளையும்  அரசு எந்திரத்தையும் தமிழனத்தின் பெருமைகளை அழிக்க நினைக்கும் பொறாமை பிடித்த நபர்களையும்,

ilami-5

ஜீவகாருண்யம் பெயரில் வேசித்தனம் செய்யும் நபர்களையும் பயன்படுத்தி ஜல்லிக்கட்டை ஒழிக்க நினைக்கும் காரணம் என்ன என்று ?

காசுக்காக சோரம் போய்க்கொண்டு ஜல்லிக்கட்டை அழிக்க நினைக்கும் அனைவரின் வருங்காலத் தலைமுறைகளும் கூட ,

பசும்பால் என்ற பெயரில்  புற்றுநோய் உருவாக்கும் மாட்டுப் பாலைதான் குடிக்கப் போகின்றன . 

இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டின் பெருமையை அவசியத்தை சொல்லி ஒரு படம் தமிழில் உருவாகி வருகிறது என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் ?

ilami-4

யுவன் அனுகிருஷ்ணா ஆகியோர் நடிக்க , ரவி மரியாவிடம் உதவியாளராக இருந்த ஜூலியன் பிரகாஷ் என்பவர் ஜோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதோடு,

 கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்  இளமி . இளமி என்றால் இளமையான பெண் என்று பொருள் 

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி  எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் வில்லனாக

 ‘கல்லூரி’ அகில்கிஷோர்,  ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்

ilami-7

இளமி திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .  பாடல்கள் முன்னோட்டம் இரண்டுமே அற்புதமாக இருந்தன . 

ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஐந்து பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன

அதில் தீப்பறக்க   முட்டிப்பாரு..  திமிலை நீயும் தொட்டுப்பாரு… 

என்று ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் அமைந்திருக்கும்  பாடலை                                                          பாடலாசிரியர் ராஜாகுருசாமியின் வரிகளுக்கு ஆந்தக்குடி இளையராஜா பாடி இருக்கிறார்.          

 இது  ஜல்லிக்கட்டின் தேசிய கீதமாக தமிழகமெங்கும் ஒலிக்கும்

நிகழ்ச்சியில் பேசிய ரவி மரியா

ilami-8

“பதினெட்டாம் நூற்றாண்டுப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை மிக சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் ஜூலியன் பிரகாஷ் .

கால கட்டத்துக்கு ஏற்ப அந்தக் கால இசைக் கருவிகளை பயன்படுத்தி சிறப்பாக இசை அமைத்துள்ளார் ஸ்ரீகாந்த்  தேவா.

படத்தில் நடித்த எல்லாரும் உடம்பில் சட்டை போடாமல் செருப்பே இல்லாமல் தலக்கோணம் பக்கத்தில் ஒரு பொட்டல் காட்டில் அமைக்கப்பட்ட கிராமம் போன்ற அரங்கில் நடித்தோம்  ” என்றார் . 

 ஸ்ரீகாந்த் தேவா தனது பேச்சில்

ilami-3  

” படத்தின் கால கட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு பழைய இசைக் கருவிகளை பயன்படுத்தினேன் .

குறிப்பாக யாழ் போன்ற பழங்கால தமிழ் இசைக்கருவிகளை எல்லாம் பயன்படுத்தி உள்ளேன் . பாடல்களை எல்லாரும் பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது . ஜெயிக்கிறோம் ” என்றார் 

இயக்குனர் ஜூலியன் பிரகாஷ்  பேசும்போது,

18 ம்  நூற்றாண்டில் நடக்கும் இக்கதையில் ஜல்லிக்கட்டு மையக்கருவாக உள்ளது.

இப்போது உள்ள ஜல்லிக்கட்டு மாதிரி நானூறு வருடங்களுக்கு  முன்பு இல்லை.   

ikami-6

இப்போது எல்லாருக்கும் திட்டிவாசலில் இருந்து வெளியே வரும் மாட்டை ஓடிப் பிடித்து அடக்கும் சாதாரண ஜல்லிக்கட்டுதான் தெரியும் 

காரணம்அ ந்த  காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த வடம் ஜல்லிக்கட்டு என்ற ,

வீரக் கலை இன்று அடியோடு அழிநது விட்டது.

ஜல்லிக்கட்டில் பல வகைகள் இருந்தாலும் வடம்  ஜல்லக்கட்டு என்பது.  

உயிரை பணயம் வைத்து விளையாடும் வீர விளையாட்டு

ilami-2

சீறி வரும் களையை நேருக்கு நேர் நின்று மேல் சட்டை எதுவுமின்றி காளையை அடக்கி வெற்றி பெறுவதுதான் அப்போதைய நிஜ ஜல்லிக்கட்டு. அதை தான் இதில் பதிவு செய்திருக்கிறோம்.

முற்றிலும் அழிந்து போன இக்கலையை நாங்கள்  திரையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறோம்.    

                                இதன் மூலமாக இப்பொழுது தடை  செய்யப்பட்டு இருக்கும் ஜல்லிக்கட்டிற்கு ஒரு விடிவு பிறக்கும் என,

 ஆணித்தரமாக  நம்புகிறோம்இத்திரைப்படத்தை பார்க்கும் போது,

18 ம் நூற்றாண்டில் நம்  முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் ஜல்லிக்கட்டு காளையை  

ilami-99

தம் பிள்ளைகள் போல் நினைத்து        

 பண்டுதம் பார்த்து,  மேய்ச்சலுக்கு கொண்டு சென்று

 வாழ்நாள் எல்லாம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பாவித்து 

ஜீவ காருண்யம் பேணி வந்தார்கள்.. 

அப்படி வளர்க்கப்பட்ட காளைகள் 

இன்று அடி   மாடுகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு அது முற்றிலுமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.                            

இன்று தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு காளைகள் இன்று இல்லை.

அவை அடி மாடுகளுக்காக வலுக்கட்டாயமாக ஏற்றுமதி  ெய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 மாடு பிடி வீரர்கள் வேதனையில் மருகிக்கொண்டிருக்கின்றனர்.

 ilami-1

இன்னும் ஐந்து ஆண்டுகள்  இந்த ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் 

மாடுபிடி வீரர்களே இல்லாமல் போய் விடுவார்கள்

ஜல்லிக்கட்டு    என்ற கலை முற்றிலுமாக அழிந்து போய் விடும். 

தமிழ் கலாச்சாரத்தின் ஆணி வேரான ஜல்லிக்கட்டு கலையை அழிக்க  நினைப்பவர்களுக்கே

 அவ்வளவு வன்மம் இருந்தால்,  அதை காக்க துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்..?

ilami-9

ஜல்லிக்கட்டு கலையை காப்பாற்ற வேண்டும் என்று …

 இளமி திரைப்படத்தை எடுத்திருக்கிறேன்

இந்த கலையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எதையும்   சந்திக்கத்  தயாராக இருக்கிறேன்” என்றார் .

வாழ்த்துக்கள்.. வாங்க  வெல்வோம்! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *