இப்போதே டிக்கட் ரேட் , பார்க்கிங் கட்டணம் , தியேட்டரில் பர்சை நொறுக்கும் நொறுக்குத் தீனி விலை,,,,, இவற்றால் நொந்து போயிருக்கிறான் தியேட்டருக்கு வரும் கொஞ்ச நஞ்ச ரசிகனும் .
இந்த நிலையில் டிக்கட் கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்று, வலியுறுத்தி வலி உண்டாக்குகிறார்களாம் தியேட்டர் அதிபர்கள் .
இப்போது அதிக பட்ச டிக்கட் கட்டணம் 120 ரூபாய் . இதை 150 ஆக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை .
ஆனால் , இப்படி உயர்த்தினால் சினிமாவுக்கு வரும் ரசிகனும் வராமல் போய் விட்டால் என்ன செய்வது என்று கவலைப் படுகிறது தயாரிப்பாளர்கள் தரப்பு.
விளைவு ?
ரொம்ப யோசித்துப் பார்த்து தியேட்டர் அதிபர்களுக்கு இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம் .
” சரி .. உங்க ஆசைப்படியே டிக்கட்டை 150 ஆக்கிருவோம் . ஆனா படம் பார்க்க வரும் மக்கள் வீட்டில் இருந்து சாப்பாடு , நொறுக்குத் தீனி , தண்ணீர் பாட்டில் எது கொண்டு வந்தாலும் அனுமதிக்க வேண்டும் . சம்மதமா ?”
பேஸ்த் அடித்துப் போன திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறது.
பேசி ஒரு முடிவுக்கு வருவாய்ங்க. !