மதுரியா புரடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரிக்க, ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கல் ராவ், கிரேசி கோபால் , காயத்ரி நடிப்பில் தேவகுமார் இயக்கி இருக்கும் படம்
இன உணர்வுள்ள ஒரு நபரின் (ஆடுகளம் நரேன்) தலைமையில் இளைஞர்கள் சிலர் , சாதி வெறி கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை கொடுமை செய்வோர், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோர் ஆகியோரை தண்டிக்கிறார்கள் .
நகரில் செல்போன் கடை வைத்திருக்கும் ஒருவர் , ஒரு கிராமத்துப் பெண்ணை (மேக்னா ஏலன்) நேசித்து அவளை நடை உடை பாவனைகளில் நவீனத்தைக் கொண்டு வந்து தனது செல்போன் கடையில் வேலைக்கு வைக்கிறார் .
ஒரு நையாண்டி இளைஞன், ஒரு நவநாகரீக இளைஞன் , ஒரு கிராமத்து நபர் ஆகிய நண்பர்கள் மூவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அவளையே காதலிக்கின்றனர்.
தவறானவர்களுக்கு தண்டனை தருவோர் இந்த மூவர் மீது கோபப்பட, ஏன் எதற்கு என்பதே இந்தப் படம்
எளிய நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆர்வத்தோடு எடுத்துள்ள படம் . அவர்களுக்கு தெரிந்ததை செய்து இருக்கிறார்கள். நகைச்சுவை, நடனம் எல்லாம் உண்டு .
கிரைம் என்பதே குற்றம்தான் . குற்றம் எப்படி தப்பில்லாமல் போகும்? படத்தின் பெயரே இது கிரைம் இல்லை இது குற்றம் இல்லை என்ற ரீதியில் இருந்திருக்க வேண்டும்
இன்னும் நல்ல திரைக்கதை படமாக்கல் தேவைப்படும் படம் .