சாய்ந்தாடும் ‘ஐ’ ?

Shankar's I Audio Launch Stills (26)
தமிழ்சினிமா வரலாற்றிலேயே பெரிய பட்ஜெட் படம் என்ற முத்திரையோடு உருவாகி வருகிறது ஷங்கரின் ஐ!

ஐ படத்தின் கதை இதுதான் என்று அனைவரும் ஏற்கும் வகையில் உலாவரும் ஒரு கதை,  ஓர்  அறிமுக இயக்குனரை ”ஐயோடா” என்று சொல்ல வைத்திருக்கிறது.  அவர்தான்  ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் இயக்குனர் கஸாலி.

ஏன் அந்த ஐயோடா?

ஐ படத்தின் கதை என்னவென்று ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ, அதுதான் அப்படியே சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையும்! 

saindhadu saindhadu“என் கதையை பார்த்து ஷங்கர் காப்பியடித்துவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கு நான் ஒன்றும் சினிமா தெரியாதவன் அல்ல. ஆனால் இது ஒத்த சிந்தனையாக கூட இருக்கலாம் அல்லவா?”  என்கிறார் கஸாலி  (அதனால்தான் ஐயையோ சொல்லாமல் ஐயோடா சொல்கிறார் )

நாம  என்ன சொல்வது என்று முடிவு செய்வதற்கு முன்பு வலைதளங்களில் வரும் ஐ படத்தின் கதையையும், அப்படியே  சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையையும்  பார்க்கணும்  இல்லையா?

‘ஐ’ படத்தின் கதையாக வெளிவந்தது இதுதான்- 
“விக்ரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயி.  ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி.  எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது.  ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லை.

 இந்நிலையில் எமி ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார்.  அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை.  இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார்.  தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.

 அதே சமயம் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடிக்கின்றார்.9ஏழு நாள் சிகப்பழகு கிரீமை விட இது ரொம்ப பவர் போல!)  அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திரத் தோற்றத்திற்கு மாற்றிவிட்டது.  இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய முயற்சிக்கிறார். 

அதை  செய்து பார்க்க ஆள் இல்லை என வில்லன் யோசித்துக் கொண்டிருக்கையில், உபேனை சந்திக்கின்றார் விக்ரம். அவரது உடம்பிலும் அந்த மருந்து ஏற்றப்படுகிறது. ஆனால், அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார் விக்ரம்.  ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார்.  ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார் விக்ரம்

.  எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக கருதி அவரை கடத்துகின்றார்.   இதற்கு எல்லாம் காரணம் உபேன் தான் என அப்புறமாக கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார்.  விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாற,  இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூரவிலங்குகளாக மோதுகின்றனர். 

பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது தான் படத்தின் முடிவு”.
சாய்ந்தாடு சாய்ந்தாடு கதை:
saindhadu-1
ஒரு டாக்டர் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த முக்கியமான மருந்தை ஆராய்ச்சி செய்ய ‘கிளினிக்கல் டிரையல்’ என்ற மருத்துவ ஆராய்ச்சிக்காக 25 வயதுக்குட்பட்ட வாலிபர்களைக் கடத்தி மருந்தைச் செலுத்தி ஆராய்கிறார். ‘ஓ’ நெகட்டிவ், ‘பி’ நெகட்டிவ் & ‘ஏபி’ நெகட்டிவ் ரத்த குரூப் உள்ள வாலிபர்கள் மருந்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு முகம், உடலெல்லாம் கொப்புளம் வந்து வீங்கி செத்துப் போகிறார்கள். ‘ஏ’ நெகட்டிவ் பிளட் குரூப் உலகத்தில் மிக அரிதான ரத்த வகை. அது படத்தின் கதாநாயகனுக்கு இருக்கிறது. 
டாக்டர் ‘ஏ’ நெகட்டிவ் குரூப் உள்ள வாலிபனைத் தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு தற்செயலான பிரச்சனையில் ஹீரோ அடிபட்டு, அந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிறான். டாக்டரும் அவனுக்கு அந்த புதிய மருந்தைச் செலுத்துகிறார். 
அவன், மருந்தின் விளைவாக பலசாலியாகிறான். சாதாரணமானவனாக இருந்தவன் பலசாலியாகி நிறைய விசயங்களைச் செய்கிறான். பின்பு, அவனுக்கும் மருந்தின் பக்க விளைவு காரணமாக முகம், உடலெல்லாம் கொப்புளம் வருகிறது. ஒரு கட்டத்தில் சீரியசாகி கோமா நிலைக்குச் செல்கிறான். 
இறுதியில், டாக்டர் என்ன ஆனார், ஹீரோ என்ன ஆனான், டாக்டரைப் பழி வாங்கினானா? என்பதுதான் படத்தின் முடிவு. மருத்துவ ஆராய்ச்சி, அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்பவைதான் கதையின் மையக் கரு.
இப்போ என்ன என்ன சொல்கிறார் கஸாலி?

“இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர். அவர் இதுவரை அந்தப் படத்தின் கதையைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஏதுமில்லை! “

ஆகவே நாமளும் சொல்லலாம் ஐயோடா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →