‘இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்க, இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம்  “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”
விரைவில் திரைக்கு வரவுள்ள இப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள்  கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே  நடைபெற்றது.

இந் நிகழ்வினில் நடிகர் சம்பத் ராம் பேசியபோது, “இனிமே நாங்கதா ஹெட் லைன்ஸ்….  இந்த டைட்டிலுக்காகவே இயக்குநர் சாய் பிரபாவை பாராட்டுகிறேன். எல்லோரும் ஹெட் லைன்ஸில் வர ஆசைப்படுவார்கள். இந்த சின்ன வயசில் ஒரு படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.  பெரிய இயக்குநராக வர அவருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் ஸ்டண்ட் சூப்பர் குட் ஜீவா சூப்பராக செய்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். “என்றார். 

இயக்குநர் சாய் பிரபா மீனா பேசியபோது, “இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள் தான், அவருக்கு என் நன்றி. சிறுபடத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் மிகப்பெரும் ஆதரவைத் தந்தார். தயாரிப்பாளர் ராம்குண்டலா ஆஷா அவர்கள் தான் படத்தை நம்பி எனக்கு வாய்ப்பு தந்து தயாரித்தார்கள்.  ஷகிலா மேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார். ஜெய் ஆகாஷ் சார் மூலம் தான் எனக்கு இங்குள்ள அனைவரையும் தெரியும். எல்லோருக்கும் என் நன்றிகள். 

பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப் படத்தை எடுத்துள்ளேன். ஒளிப்பதிவாளர் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார். இசையமைப்பாளரை நான் நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். இப் படத்தில் படம் நன்றாக வர வேண்டுமென எல்லோருடனும் சண்டை போட்டுள்ளேன். ஆனால் அவர்கள் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை அதை வைத்து மனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே கிறுக்கன் என சொன்ன எலான் மஸ்க் இன்று உலகையே ஆளுகிறார். எனில் என்னை மாதிரி இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.”என்றார். 

தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர். கே. அன்பு செல்வன் பேசியபோது, “இயக்குநர் முதலில் யோக்கியன் என ஒரு படம் எடுத்தார்.  அது ரிலீஸாகி ஆறு மாதத்திற்குள் அடுத்த படத்தை எடுத்து டிரெய்லர் விழாவிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் சாய் பிரபா. அவரது திறமைக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக வேண்டும்.

இப்போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு மேடைக்கு வந்து அவர்களுக்கு தோன்றுவதையும், பட ஹீரோக்களையும் திட்டி பேசிவிட்டுப் போகிறார்கள். படம் பற்றி பேச மறுக்கிறார்கள். இது மாற வேண்டும். சினிமாவில் யாரையும் ஏமாற்றக் கூடாது. நான் இருக்கும் வரை யாரையும் ஏமாற்ற விடமாட்டேன் எனக்கூறி விடை பெறுகிறேன் “என்றார். 

நடிகர் ஜெய் ஆகாஷ் பேசியபோது, “இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்று எடுத்த படம் தான் யோக்கியன். இப்போது அவனே அவன் முயற்சியில் இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ் படத்தை இயக்கியுள்ளான். டிரெய்லர் , ஷாட்ஸ் எல்லாம் நன்றாக வந்துள்ளது. படத்தில் இருக்கும் அனைவரும் என் நண்பர்கள்தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளனர். நான் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் சாய் தான் நன்றி மறக்காமல் இருக்கிறான். இவனிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது அவன் ஜெயிக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.”என்றார். 

நடிகை ஷகீலா பேசியபோது, “எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நாட்கள் மட்டும் தான் வேலை பார்த்தேன் எனக்கு நல்ல வேடம் தந்தார் இயக்குநர். ஜெய் ஆகாஷ்  படைப்பாளியை உருவாக்கியதற்காக  என் நன்றிகள். நான்கு பெண்கள் மேக்கப் இல்லாமல் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளனர். எல்லோருமே சின்ன இயக்குநராக இருந்து, சின்ன நடிகராக இருந்து தான் பெரியாளாக ஆகிறார்கள். இப்படம் பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.”என்றார். 

தேசிய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஐ ஜே கே,  ஜி பூபதி பேசியபோது, “மிக நல்ல தலைப்பை வைத்துள்ளார் இயக்குநர்.  ஒரு நிகழ்ச்சியில் இயக்குநரின் பேச்சைக் கேட்டு ஆர்வமாகி அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடன் படம் செய்யலாம் என்று கேட்டேன். அப்போது இந்தப் படம் முடிந்தவுடன் செய்யலாம் என்றார். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார் இயக்குநர். கண்டிப்பாக அவரது உழைப்பிற்கு இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் சமூகத்திற்கு தேவையான படைப்பை தந்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.”என்றார். 

நடிகர் பிர்லா போஸ் பேசியபோது, “சினிமாவின் 24 கிராப்டிலும் தேர்ந்த திறமை கொண்டவர் ஜெய் ஆகாஷ். மிகப்பெரிய ஆளுமை. அவர் படத்தில் வேலை பார்த்தாலே எல்லாம் கற்றுக்கொள்ளலாம். சாய் பிரபாவும் மிகத் திறமையானவர், மிக கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம்   மிகப்பெரிய படம்.  நடிகர் சங்கத்திற்கு திரு விஜயகாந்த் அவர்களின் பெயரை வைக்க வேண்டுமென எல்லோரும் சொல்லி வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் முதலில் நன்றாக வரவேண்டும் அதற்கு என் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்த மேடையில் தருகிறேன். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.”என்றார். 

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியபோது, “என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய தலைவர்  விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழ வைக்கிறது. சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி.  இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் “என்றார். 

 

நடிகர்கள்
சாய் பிரபா மீனா
ராஜ் மித்ரன்
மீசை ராஜேந்திரன்
பிர்லா போஸ்
ஆஷா
கவிதா
சங்கீதா
கீர்த்தனா
கௌரவத் தோற்றத்தில் ஷகீலா

தொழில் நுட்ப குழு
இயக்கம் – சாய் பிரபா மீனா
தொழில் நுட்ப குழு
ஒளிப்பதிவு – பால்பாண்டி
இசை – சந்தோஷ் ராம்
எடிட்டிங் – நவீன் குமார்
சண்டை பயிற்சி – சூப்பர் குட் ஜீவா
ஆர்ட் டைரக்டர் – கிரண்&பண்டு
இணை இயக்குனராக – ஜே டி
தயாரிப்பாளர் – ராம்குண்டலா ஆஷா
மக்கள் தொடர்பு – A ராஜா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *