மாறுபட்ட களத்தில், கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி ‘

iraivi 6

பிட்சா மற்றும் ஜிகிர்தண்டா படங்களின் மூலம் எல்லோரையும் வியக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி இருக்கும் படம் இறைவி . 

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா,  அபி & அபி பிக்சர்ஸ் சார்பில்  அபினேஷ் இளங்கோவன் , திருக்குமரன் என்டர்டெயின்மென் சார்பில் சி வி குமார் ஆகியோர் தயாரிக்க, 

எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, கருணாகரன், காளி வெங்கட்  என்று,  
iraivi 3
70 MM திரையும் நேரிசலாகிற அளவுக்கு படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் .  
ஒளிப்பதிவு,  இறுதிச் சுற்று படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் . இசை சந்தோஷ் நாராயணன்.
 
ஜூன்  மூன்றாம்தேதி வெளிவர இருக்கும், 
 
‘ இந்தப் படத்தின் முன்னோட்டத்தில்  ஓர் அற்புதம் செய்து இருக்கிறார்  கார்த்திக் சுப்புராஜ் . 
 
அதாவது, பெண்களின் உணர்வுகளின் குரலாக வரும் இந்தப் படத்தின் முன்னோட்டத்தில்,  ஆண் கதாபாத்திரங்கள் சம்மந்தப்பட்ட நிகழுவுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருந்தது .
 
iraivi 2
ஆனால் அந்த ஆண் கதாபாத்திரங்கள் அனைத்தும் வெறிபிடித்து முரட்டுத்தனமாக முட்டாள்தனமாக நடந்து கொள்வதாகவே இருந்தது . 
 
 அப்படியானால் சம்மந்தப்பட்ட இந்த ஆண் கதாபாத்திரங்களிடம் சிக்கித் தவிக்கும் பெண்களின் நிலை என்ன கேள்வி தானாக மனதில் எழுகிறது .
அந்த உணர்வு மூலமே இது பெண்களின் உணர்வுகளை சொல்லும் படம் என்ற  நம்பிக்கையை உருவாக்கி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்’ 
 
— என்பதை  முன்பே  ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறோம் 
 
iraivi 4
அதே போல, ‘ தனது முதல் இரண்டு படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு  வேறொரு  களத்தை கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்து இருப்பது தெரிவதோடு ,
அது ஆர்வத்தை தூண்டும்படியும் இருக்கிறது’  என்பதையும் முன்பே  குறிப்பிட்டு இருந்தோம் 
 
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை  ஒட்டி படத்தின் நடந்த திரை விலக்க நிகழ்ச்சியில் , படம் சம்மந்தப்பட்ட பிரபலங்களை தாங்க முடியாமல் மேடை தள்ளாடியது . 
 
பிச்சைக்காரன் படத்தை வாங்கி வெளியிட்ட  கே.ஆர் . பிலிம்ஸ் சரவணன் இந்தப் படத்தை வாங்கி வெளியிட,
iraivi 1
அவருடன் மீனாட்சி கல்விக் குழுமங்களின் உரிமையாளர் கோகுல் உருவாக்கி இருக்கும் ஏரியா 78 நிறுவனமும் சேர்ந்து விநியோகம் செய்கிறது 
 
கே . ஆர் . பிலிம்ஸ் சரவணன் பேசும்போது
iraivi 20
”  நாங்கள் வாங்கி வெளியிட்ட பிச்சைகாரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது . அது  அம்மா செண்டிமெண்ட் படம்.  இறைவியும் அப்படி பெண்களை உயர்த்தி சொல்லும் படம் . 
 
பிச்சைக்காரன்  படத்தின்  வெளியீட்டுக்கு முன் பத்தீர்க்கையாளர்களை சந்தித்த ஒரு நிகழ்ச்சியில் , ‘படத்தின் வெற்றி விழாவில் பேசுவேன்’ என்று சொன்னேன் . அப்படியே பேசினேன். 
 
அதை போல இப்போதும் சொல்கிறேன் . இறைவி படமும் மாபெரும் வெற்றி பெறும். இதன் வெற்றி விழாவிலும் பேசுவேன்” என்றார் 
 
ஏரியா 78 நிறுவனம் சார்பில் பேசிய சதீஷ்
iraivi 7
” நங்கள் ஆரம்பத்தில் படம் தயாரிகத்தான் நினைத்தோம் . அதற்கான வேலைகளிலும் இருக்கிறோம் . அந்த சமயத்தில் சரவணன் வந்து இறைவி படம் பற்றி  சொல்ல, 
 
அவருடன் சேர்ந்து இந்தப் படத்தை வெளியிடுகிறோம் . தொடர்ந்து படங்களை வெளியிடுவோம். தயாரிப்பிலும் இறங்குகிறோம்” என்றார் 
 
படத்தில் ஒரு முக்கியக கதாபாத்திரததில் நடித்து இருக்கும் ராதாரவி
iraivi 12
” படப்பிடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் அறிவைப் பார்த்து வியந்து விட்டேன். அப்படி ஒரு டைரக்டர் அவர் .
ரயிலில்  நான் இருக்கும் காட்சி ஒன்று படத்தில் வருகிறது . அந்தக் காட்சியைப் பார்த்து அசந்து விட்டேன்.” என்றார் .
காளி வெங்கட் தன் பேச்சில், 
iru 2 
” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்  நடித்து இருக்கிறேன் .
 ஆனா ரொம்ப நல்ல கேரக்டர் ” என்றார் . 
பூஜா தேவரியா பேசும்போது , 
iraivi 10 
” இவ்வளவு  பெரிய நட்சத்திரங்கள் இருக்கிற , கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிற — அதுவும் பெண்மைக்கு முக்கியத்துவம் தருகிற,
 இந்தப் படத்தில் நடித்திருப்பது பெருமையாக இருக்கிறது ” என்றார் 
 “படத்தில் நிறைய கேரக்டர்கள் இருந்தாலும்
iraivi 13
கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணத்தில் எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் இருக்கும் . என் கேரக்டரும் அப்படியே ” — இது கருணாகரன் 
நிகழ்ச்சிக்கு வந்து இருந்த ஒளிப்பதிவாளர் நட்ராஜ்
iraivi 8
“டிரைலரும் பாடல்களும் சூப்பரா  இருக்கு . மகேந்திரன் , பாலச்சந்தர் படங்களின் பாணியில்  படம் நல்லா இருக்கும் என்பது இப்பவே தெரியுது ” என்றார் . 
அதே போல நடிகர் செந்தில் பேசும்போது, 
iraivi 11
” இந்த  படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .
இன்னொரு சிறப்பு விருந்தினரான தம்பி ராமையா தன் பேச்சில் , 
iraivi 9
” எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது .” என்றார் . 
இயக்குனர் நலன் குமாரசாமி பேசும்போது
iraivi 21
” கார்த்திக் சுப்புராஜ் படங்களின் ஸ்கிரிப்ட் ஆரம்பத்திலேயே எனக்கு,  படிக்க வந்து விடும் . அதனால் அதை படமாக பார்க்கும்போது,
 ஒரு ரசிகனுக்கு கிடைக்கும் உணர்வு  எங்களுக்கு கிடைக்காது .இந்த இறைவி  படத்தின் ஸ்கிரிப்டையும் அப்படி முன்பே படித்து விட்டேன் .
ஆனாலும்  படம் பார்க்கும்போது,  கதை பற்றி ஒன்றுமே தெரியாமல் வியந்து பாராட்டி ரசிக்கிற — ஒரு ரசிகனின் மன நிலைக்கு நான் போனேன் . 
அந்த மேஜிக்கை செய்தவர்கள் இந்தப் படத்தில் நடித்து இருக்கும் நடிக நடிகையர் . அவ்வளவு சிறப்பான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்கள் ” என்றார் 
படத்தின் ஹீரோக்களில் ஒருவரான பாபி சிம்ஹா தன் பேச்சில் 
iraivi 14
” ஜிகிர்தண்டா படத்துக்குப் பிறகு மீண்டும் அவரது அடுத்த படத்திலேயே இருக்கிறேன் . படம் சூப்பரா வந்திருக்கு . எல்லாருக்கும் பிடிக்கும் ” என்றார் .
விஜய் சேதுபதி பேசும்போது 
iraivi 16
” பீட்சா படம் இறுதிக்கட்ட வேலைகள் நடந்த போதே இந்தப் படம் பற்றி பேசுவார் கார்த்திக் சுப்புராஜ் . அப்படி ஒரு  நல்ல ஸ்கிரிப்ட்.
இப்போது இது படமாக வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது . நானும் படத்தின் வெளியீட்டுக்காக காத்து இருக்கிறேன்” என்றார் 
 
எஸ் ஜே சூர்யா பேசும்போது
iraivi 15
” நான் சினிமாவுக்கு வந்ததும் டைரக்டர் ஆனதும் தயாரிப்பாளர் ஆனதும் ஒரு நடிகனான புகழ் பெற  வேண்டும் என்பதற்காகத்தான் .
சில படங்களில் நடிக்கவும் செய்தேன் . ரசிகர்களின் பாராட்டைப் பெற்றேன் . 
 
 ஆனால்  என் மனதில் ஓர் எண்ணம் இருந்தது தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் தனித் தன்மையுள்ள ஒரு இயக்குனர் எப்போது என்னை ஒரு நடிகனான மதித்து,  தன் படத்தில் நடிக்க அழைக்கிறாரோ,
 
 அப்போதுதான் நடிப்பு  விசயத்தில் எனது  முதல் அடியை எடுத்து வைத்ததாக அர்த்தம் என்று முடிவு செய்து இருந்தேன் .  யாருமே கூப்பிடல.
 
ஆனா எப்போது கார்த்திக் சுப்புராஜால் அழைக்கப்பட்டு இந்தப படத்தில் நடிக்க ஆரம்பித்தேனோ அப்போதே என் வெற்றி  துவங்கி விட்டது ” என்றார் . 
 
“இந்தப் படத்தின் மூலம் கார்த்திக்  சுப்புராஜ் வேறொரு களத்தை தொட்டு இருக்கிறார் .
iru 1
இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறும்” என்றார் , அபினேஷ் இளங்கோவன் . 
 
தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில் , 
iraivi 17
” படத்தின் கதையை கார்த்திக் சொன்ன உடனேயே எனக்கு ரொம்ப பிடித்தது . ‘இந்த மாதிரி குணாம்சத்தில் படம் வந்து ரொம்ப  நாள்  ஆச்சு . பண்ணுவோம்’னு சொன்னேன் .
இப்போ எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இந்தப் படம் வந்துள்ளது சந்தோசம் ” என்றார் 
 
ஞானவேல் ராஜா பேசும்போது
iraivi 19
” படம் பார்த்த எல்லோரும் இந்தப் படத்தைப் பற்றி மிக உயர்வாக பேசுகிறார்கள் . ஒரு மிகப்பெரிய வைப்ரேஷன்  தரும் படமாக இருக்கிறது என்கிறார்கள் .
இந்தப் படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ” என்றார் 
 
 படம் சம்மந்தப்பட்ட பல்வேறு கலைஞர்களும் இந்தப் படத்துக்குள் வந்த விதத்தையும் அவர்களின் பங்காளிப்பு மற்றும் திறமையையும் பாராட்டிப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், 
 
iraivi 18
” எனக்கு அவ்வளவாக கதை சொல்ல வராது . ஜிகிர்தண்டா முடிந்த நிலையில் ஒரு நாள் தயாரிப்பாளர் சி வி குமாரிடம் இந்தப் படத்தின் கதையை ஜஸ்ட் ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம்தான் சொன்னேன் .
ஆனால் அவர் சிறப்பாக புரிந்து கொண்டு ‘பண்ணலாம்’ என்று சம்மதம் சொன்னார் . ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன்  
அம்மா, சகோதரி, மனைவி , மகள் என்று யாராக இருந்தாலும் பெண்கள் என்றாலே அவர்கள் ஆணுக்கு அடங்கியவள் என்ற எண்ணம் சமூகத்துக்கு இருக்கிறது . 
 
அதன் காரணமாக பெண்களின்  உணர்வுகள் ஆண்களால் நசுக்கி சிதைக்கப்பட்டு அவர்கள் சூழ்நிலைக் கைதியாக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது . 
 iraivi 5
இதை செய்யாமல் சமமாக மதிக்கும் மன நிலைக்கு ஆண்கள் வரவேண்டும் என்பதே இந்தக் கதையின் நோக்கம் 
 
 படத்தில் நடித்த எல்லா நடிக நடிகையரும் கொடுத்த ஒத்துழைப்பு சிறப்பானது . எஸ் ஜே சூர்யா நடித்து இருக்கும் கதாபாத்திரத்தின் மனைவி கேரக்டருக்கு,
 வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமாலினி முகர்ஜியை கொண்டு வந்தேன் . 
 
காரணம் ஒன்று . ஒரு நல்ல மாற்றமாக இருக்கட்டுமீ என்று . இன்னொன்று ஆறு ஏழு வயசுக் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒத்துக் கொண்ட ஒரு சிலரில் அவரும் ஒருவர் . 
 
படம் எல்லோருக்கும்  பிடிக்கும் என்று நம்பறேன் ” என்றார் 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →